Last Updated : 24 Apr, 2025 05:15 AM

 

Published : 24 Apr 2025 05:15 AM
Last Updated : 24 Apr 2025 05:15 AM

நடப்பு ஐபிஎல் சீசனில் கோட்டை விடப்பட்ட 111 ‘கேட்ச்கள்!

கிரிக்​கெட் போட்​டிகளில் மிக​வும் முக்​கிய​மானது 3 துறை​கள். பேட் டிங், பந்​து​வீச்​சு, ஃபீல்​டிங் ஆகிய 3 துறைகளி​லுமே சிறந்து விளங்​கக் கூடிய அணி​கள் தான் எப்​போதும் வெற்​றிக் கனியைச் சுவைக்​கின்​றன.

ஆனால், சில போட்​டிகளில் மோச​மான ஃபீல்​டிங் காரண​மாக மிகச் சிறந்த பேட்​ஸ்​மேன்​கள், பந்​து​வீச்​சாளர்​களைப் பெற்​றுள்ள சிறந்த அணி​கள் கூட தோல்​வியைச் சந்​திக்க நேரிடும். குறிப்​பாக எதிரணி​களைச் சேர்ந்த முக்​கிய வீரர்​களின் கேட்ச்​களை கோட்டை விடு​வது அந்​தப் போட்​டி​யின் முடிவையே மாற்றி அமைக்​கக்​கூடும்.

அவ்​வாறு கேட்ச்​களை கோட்டை விடு​வ​தால் சுதா​ரித்​துக் கொண்டு விளை​யாடும் பேட்​ஸ்​மேன்​கள் அரை சதம், சதம் என விளாசி போட்​டியை தங்கள் வசம் எடுத்​துச் சென்​று​விடு​வர். அந்த அளவுக்கு கேட்ச்​கள் மிக முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தவை.

கிரிக்​கெட் புத்​தகத்​தில் கேட்ச்​களால் போட்​டியை வெல்ல முடி​யும் ​(கேட்ச்​சஸ் வின் மேட்ச்​சஸ்) என்ற சொல​வடை உண்​டு. அதனால்​தான் பயிற்சியின் போது தனி​யாக வீரர்​களுக்கு கேட்ச் செய்​வதற்கு தீவிர பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.

ஆனால், நடப்பு ஐபிஎல் சீசனில் இது​வரை 111 கேட்ச்​கள் கோட்டை விடப்​பட்​டுள்​ளன. மிகச்​சிறந்த பேட்​டிங், பந்​து​வீச்​சு, ஃபீல்​டிங் என களை​கட்​டும் ஐபிஎல் போட்​டிகளில் இந்த அளவுக்கு கேட்ச்​கள் கோட்டை விடப்​படு​வது இதுவே முதல்​முறை​யாகும்.

நடப்பு ஐபிஎல் சீசனில் தற்​போது 40 போட்​டிகள் (லக்​னோ-டெல்லி போட்டி வரை) நடந்து முடிந்​துள்​ளன. இந்த 40 போட்​டிகளில் மட்​டுமே 111 முறை கேட்ச்​களை ஃபீல்​டர்​கள் கோட்டை விட்​டுள்​ளனர்.

2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி முதல் தற்​போது வரை இது ஒரு மோச​மான சாதனை​யாகப் பார்க்​கப்​படு​கிறது.

கடந்த 2020-ம் ஆண்​டில் 95 கேட்ச்​களும், 2021-ம் ஆண்​டில் 93 கேட்ச்​களும், 2022-ம் ஆண்​டில் 104 கேட்ச்​களும், 2023-ம் ஆண்​டில் 78 கேட்ச்​களும், 2024-ம் ஆண்​டில் 110 கேட்ச்​களும் ஃபீல்​டர்​களால் கோட்டை விடப்​பட்​டுள்​ளன.

தற்​போதைய 2025-ம் ஆண்டு சீசனில் இது​வரை, 111 கேட்ச்​களை ஃபீல்​டர்​கள் தவற​விட்​டுள்​ளனர். ஒட்​டுமொத்த அணி​களின் கேட்ச் பிடிக்​கும் திறன் 75.2 சதவீத​மாக உள்​ளது. நடப்பு சீசனில்​தான் அதிக அளவாக கேட்ச்​கள் கோட்டை விடப்​பட்​டுள்​ளன. இந்த சீசனில் இன்​னும் 34 போட்​டிகள் எஞ்சியிருக்​கின்றன என்​பதை நாம் நினை​வில் கொள்​ளவேண்​டும். இதனால் தவற​விடப்​படும் கேட்ச்​களின் எண்​ணிக்கை கூடு​வதற்கு அதிக வாய்ப்​பு​கள் உள்​ளன.

நடப்பு சீசனில் அதிக கேட்ச்​களை தவற​விட்ட அணி​யாக சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) உள்​ளது. அந்த அணி இது​வரை 8 போட்​டிகளில் விளை​யாடி 16 கேட்ச்​களை தவற​விட்​டுள்​ளது. 27 கேட்ச்​களை மட்​டுமே அந்த அணி வீரர்​கள் பிடித்​துள்​ளனர்.

அதே​நேரத்​தில் குறைந்த அளவு கேட்ச்​களை கோட்டை விட்ட அணி​யாக மும்பை இந்​தி​யன்ஸ் அணி உள்​ளது. அந்த அணி 8 ஆட்​டங்​களில் பங்​கேற்று வெறும் 8 கேட்ச்​களை மட்​டுமே தவற​விட்​டுள்​ளது. மாறாக 41 கேட்ச்​களை அந்த அணி வீரர்​கள் தவறாமல் பிடித்​துள்​ளனர். இதன்​மூலம் மும்பை அணி​யின் கேட்ச் பிடிக்​கும் திறன் 83.6 சதவீத​மாக உள்​ளது. அதனால்​தான் அந்த அணி முதலிடத்​தில் உள்​ளது.

பெங்​களூரு அணி 7 கேட்ச்​களை​யும், கொல்​கத்தா அணி 7 கேட்ச்​களை​யும் தவற​விட்​டுள்​ளன. ஆனால் இந்த 2 அணி​களும் குறை​வான கேட்ச்​களை தவற​விட்​டிருந்​தா​லும், கேட்ச் பிடிக்கும் திறன் சதவீதம் மும்பை அணியை விடக் குறை​வாக உள்​ளது. அதனால்​தான் பட்​டியலில் பின்தங்கியுள்ளன.

அதே​போல், குஜ​ராத் அணி 11 கேட்ச்​களை​யும், ஹைத​ரா​பாத் அணி 9 கேட்ச்​களை​யும், ராஜஸ்​தான் அணி 11 கேட்ச்​களை​யும், லக்னோ அணி 14 கேட்ச்​களை​யும், பஞ்​சாப் அணி 13 கேட்ச்​களை​யும், டெல்லி அணி 15 கேட்ச்​களை​யும் தவற​விட்​டுள்​ளன.

பஞ்​சாப் கிங்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில், சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 55 பந்​துகளில் 141 ரன்​களை விளாசி​னார். அந்த இன்​னிங்​ஸின்​போது அவர் கொடுத்த கேட்ச்​களை பஞ்​சாப் அணி​யினர் 2 முறை தவற​விட்​டனர். அதை சரி​யாகப் பயன்படுத்திக் கொண்ட அவர் அபார​மாக விளை​யாடி சதமடித்து விட்​டார்.

சிஎஸ்கே அணிக்கு எதி​ராக பெங்​களூரு அணி சென்னை சேப்​பாக்​கம் மைதானத்​தில் விளை​யாடிய​போது, பெங்​களூரு அணி​யின் கேப்​டன் ரஜத் பட்​டி​தார் கொடுத்த 3 வாய்ப்​பு​களை சிஎஸ்கே வீரர்​கள் வீணாக்​கினர். இதைப் பயன்​படுத்​திய அவர் 32 பந்​துகளில் 51 ரன்​கள் குவித்​து​விட்​டார்.

மேலும், சிஎஸ்​கே​வின் கோட்டை என்று சொல்​லப்​படும் சென்​னை​யில் 17 ஆண்​டு​களாக வெற்றி பெறாமல் இருந்த பெங்​களூரு அணி​யும் வெற்றி பெற்​று​விட்​டது. இதற்கு மோச​மான ஃபீல்​டிங்​கும், கேட்ச்​களை தவற​விட்​டதும்​தான் காரணம் என்று கிரிக்​கெட் வல்​லுநர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

எனவே, மைதானத்​தில் எழும்​பும் பந்​துகளை கேட்ச் செய்​வதை வீரர்​கள் தவற​விடக்​கூ​டாது என்று கிரிக்​கெட் விமர்​சகர்​கள் கணிக்​கின்​றனர். கேட்ச்​களை தவறாமல் பிடிப்​பது வெற்​றிக்​கனியைப் பறிப்​பது போன்​றது என்​பதே நிதர்​சனம்.

இனி வரும் போட்​டிகளிலாவது ஐபிஎல் அணி வீரர்​கள்​ தங்​களுக்​கு வரும்​ கேட்ச்​களை தவறாமல்​ பிடிப்​பார்கள்​ என்​று நம்​புவோ​மாக..!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x