Published : 24 Apr 2025 04:43 AM
Last Updated : 24 Apr 2025 04:43 AM

சொந்த மைதானத்தில் வெற்றியைத் தொடங்குமா பெங்களூரு அணி? - ராஜஸ்தான் ராயல்ஸுடன் இன்று மோதல்

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் இன்று ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி), ராஜஸ்​தான் ராயல்​ஸ்​(ஆர்​ஆர்) அணி​கள் மோதவுள்​ளன.

பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்​தப் போட்டி நடை​பெறவுள்​ளது. இந்த சீசனில் இது​வரை சொந்த மைதானத்தில் நடை​பெற்ற ஒரு போட்​டி​யில் கூட பெங்​களூரு அணி வெற்றி பெற​வில்​லை. எனவே, இன்று நடை​பெறும் போட்​டி​யில் ராஜஸ்​தானை வீழ்த்தி வெற்​றிக் கணக்கை பெங்​களூரு அணி தொடங்​கும் என்று ரசிகர்​கள் எதிர்​பார்த்​துக் காத்​திருக்​கின்​றனர்.

பெங்​களூரு அணி இது​வரை 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 5-ல் வெற்​றி, 3-ல் தோல்வி என 10 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 3-வது இடத்​தில் உள்​ளது. பெங்​களூரு மைதானத்​தில் நடை​பெற்ற 3 ஆட்​டங்​களில் குஜ​ராத், டெல்​லி, பஞ்​சாப் அணி​களிடம் அந்த அணி தோல்வி கண்​டுள்​ளது. ஆனால் வெளிமை​தானங்​களில் நடை​பெற்ற 5 ஆட்​டங்​களி​லும் அந்த அணி வெற்றி பெற்​றுள்​ளது.

எனவே, இன்​றைய ஆட்​டத்​தில் உள்​ளூர் மைதானத்​தில் வெற்றி பெற்று கணக்​கைத் தொடங்​கு​வ​தில் பெங்​களூரு அணி வீரர்​கள் முழு​மை​யாக முயற்சி செய்​யக்​கூடும்.

இன்​றைய ஆட்​டத்​தில் பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்​தத் படிக்​கல், ரஜத் பட்​டி​தார், ஜிதேஷ் சர்​மா, டிம் டேவிட் ஆகியோரிட​மிருந்து அதிகபட்ச செயல்​திறன் வெளிப்​படும் என்று ரசிகர்​கள் எதிர்​பார்க்​கின்​றனர். அதே​போல், பவுலிங்​கில் அந்த அணி புவனேஸ்​வர் குமார், யஷ் தயாள், ஜோஷ் ஹேசில்​வுட், கிருணல் பாண்​டி​யா, சுயாஷ் சர்மா ஆகியோ​ருடன் பலம் மிகுந்து காணப்​படு​கிறது. அதே நேரத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி இதுவரை 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 2-ல் வெற்​றி, 6-ல் தோல்​வி​யுடன் 4 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 8-வது இடத்​தில் உள்​ளது. ராஜஸ்​தான் அணி இது​வரை சிஎஸ்​கே, பஞ்​சாப் அணி​களை மட்​டுமே வீழ்த்​தி​யுள்​ளது. கடைசி​யாக ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற பெங்​களூரு அணிக்​கெ​தி​ரான போட்டியில், அந்த அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. அந்​தத் தோல்விக்கு பழிக்கு பழி வாங்​கும் முனைப்​புடன் இந்த ஆட்டத்தில் ராஜஸ்​தான் விளை​யாடக்​கூடும்.

அந்த அணி​யின் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், கேப்​டன் சஞ்சு சாம்​சன், ரியான் பராக், துருவ் ஜூரெல், சிம்​ரன் ஹெட்​மயர் ஆகியோர் அதிரடி​யாக விளை​யாடும் பட்​சத்​தில் அந்த அணிக்கு வெற்றி கைகூடும். அணி​யில் புதி​தாக இணைந்​துள்ள 14 வயதே​யான வீரர் வைபவ் சூர்​ய​வன்ஷி மீது மிகப்​பெரிய எதிர்​பார்ப்பு உள்​ளது. லக்னோ அணிக்கு எதி​ராக கடந்த ஆட்​டத்​தில்​தான் அறி​முக​மா​னார். முதல் போட்​டி​யிலேயே அவர் 20 பந்துகளில் 34 ரன்​கள் விளாசி அணி நிர்​வாகத்​தின் நம்​பிக்​கை​யைப் பெற்​றுள்​ளார். தொடக்க வீர​ராக களம் காணும் அவரிட​மிருந்து அதிகபட்ச செயல்​திறன் வெளிப்​படும் என்று எதிர்​பார்க்​கலாம்.

அதே​போல், பந்​து​வீச்​சில் ஜோப்ரா ஆர்ச்​சர், துஷார் தேஷ்​பாண்​டே, சந்​தீப் சர்​மா, தீக்​ச​னா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் சிறப்​பான செயல்​திறனை வெளிப்​படுத்​து​வார்​கள்​ என்​று நம்​பலாம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x