Published : 23 Apr 2025 10:33 PM
Last Updated : 23 Apr 2025 10:33 PM
ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி.
விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியாரும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இயற்கை சூழல் நிறைந்த பஹல்காம் பள்ளத்தாக்கை குறிப்பிடும் வகையிலான படத்தை பகிர்ந்துள்ளார். அதன் மேல் பக்கம் ரத்தம் சொட்டும் வகையில் உள்ளது. அந்த படத்தில் ‘All Eyes On Pahalgam’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
“பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை குறித்து பேசுவதில் நான் மிகுந்த வருத்தத்தோடு உள்ளேன். இந்த கொடுஞ்செயலால் அப்பாவி மக்களின் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உடைந்து போயுள்ளன. இத்தகைய வன்முறை தனிநபர்களை குறிவைப்பது மட்டுமல்லாமல், நமது சமூகத்தின் கட்டமைப்பையும் மட்டுப்படுத்துகிறது. சோதனையான இந்த நேரத்தில் பயங்கரவாதத்தை கண்டிப்பதில் நாம் ஓரணியில் நிற்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நமது இரங்கலைத் தெரிவிக்க வேண்டும்.
அமைதி மற்றும் மீள்தன்மைக்கான உறுதிப்பாட்டில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். நீதி கிடைக்க பிரார்த்தனை செய்வோம்” என ஷமி தனது பதிவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT