Last Updated : 23 Apr, 2025 10:26 AM

 

Published : 23 Apr 2025 10:26 AM
Last Updated : 23 Apr 2025 10:26 AM

அஞ்சாத மன உறுதி, அசராத திறன், அற்புதமான டெக்னிக் - சிஎஸ்கே ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஆயுஷ் மாத்ரே..!

அஞ்​சாத மன உறு​தி, அசராத திறன், அற்​புத​மான பேட்​டிங் தொழில்நுட்பத்தால் சென்னை ரசிகர்​களை முதல் ஆட்​டத்​திலேயே கவர்ந்து இழுத்​துள்​ளார் சென்னை சூப்​பர் கிங்ஸ் (சிஎஸ்​கே) அணி​யின் இளம் வீரர் ஆயுஷ் மாத்​ரே. மகா​ராஷ்டிர மாநிலம் விரார் பகு​தி​யைச் சேர்ந்த ஆயுஷ் மாத்​ரே, கடந்த 20-ம் தேதி மும்பை வான்​கடே மைதானத்​தில் சிஎஸ்கே அணிக்​காக முதல்​முறை​யாக களமிறங்கி 15 பந்​துகளில் 32 ரன்​களை விளாசி அணி நிர்​வாகத்​தின் நம்​பிக்​கையை வசப்​படுத்​தி​யுள்​ளார்.

முதல் போட்​டி​யிலேயே மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யின் பந்​து​வீச்சை விளாசித்​தள்ளி பயமறியா சிங்​கம் என்​பதை நிரூபித்​துள்​ளார் மாத்​ரே. மேலும், சிஎஸ்கே அணிக்​காக களமிறங்​கிய மிக இளம் வயது வீரர்​கள் பட்​டியலில் முதலிடத்​தை​யும் ஆயுஷ் மாத்ரே பிடித்​துள்​ளார். அவர் 17 வயது 278 நாட்​களான நிலை​யில் சிஎஸ்கே அணிக்​காக விளை​யாடி​னார். இதற்கு முன்​பு, அபிநவ் முகுந்த் 18 ஆண்டு 139 நாட்​களான நிலை​யில் களமிறங்​கிய இளம் சிஎஸ்கே வீரர் என்ற பெயரைப் பெற்​றிருந்​தார்.

முதல் போட்​டி​யிலேயே தீபக் சாஹர், அஸ்​வனிகு​மாரின் பந்​துகளைச் சிதறடித்​தார். குறுகிய நேரமே களத்​தில் இருந்​த​போதும் அனைத்து சிஎஸ்கே ரசிகர்​களின் அன்​பை​யும் பெற்​று​விட்​டார். அதே​நேரத்​தில் தன்னை 3-வது வீர​ராக களமிறக்​கிய அணி நிர்​வாகத்​தின் நம்​பிக்​கை​யை​யும், கேப்​டன் எம்​.எஸ்​.தோனி​யின் பெயரை​யும் காப்​பாற்​றி​யுள்​ளார்.

இளம் வீர​ராக இருந்​த​போதும், தன்​னுடைய சிறந்த பேட்​டிங் தொழில்நுட்பத்தால் எளி​தாக பந்​து​வீச்​சாளர்​களை கையாள்​வது அவருக்கு கூடு​தல் பலமாக உள்​ளது. அஞ்​சாத மன உறு​தி, அசராத திறன், அற்​புத​மான பேட்டிங் டெக்​னிக் போன்​றவை​தான் அவரது பலம் என்​கிறார் மும்பை 19 வயதுக்​குட்​பட்​டோர் அணி​யின் பயிற்​சி​யாள​ரான தினேஷ் லாட். இவர்​தான் ரோஹித் சர்​மா, ஷர்​துல் தாக்​குர் ஆகியோரின் இளம் வயது பயிற்​சி​யாளர்.

அவர் மேலும் கூறும்​போது, “மிக​வும் நம்​பிக்​கைக்​குரிய கிரிக்​கெட் வீர​ராக ஆயுஷ் மாத்ரே வரு​வார். எதை​யும் நேர்​மறை​யான எண்​ணங்​களு​டன் அணுகி வெற்​றியைக் காண்​பார். மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு எதி​ராக அவர் விளை​யாடிய இன்​னிங்​ஸைப் பார்த்​தாலே நமக்​குத் தெரி​யும். ஆயுஷ் மாத்​ரேவை மும்பை இந்​தி​யன்ஸ் வீரர்​கள் ரோஹித் சர்​மா​வும், சூர்​யகு​மார் யாத​வும் தட்​டிக்​கொடுத்​துப் பாராட்​டினர்.

அவரை 10 வயதிலிருந்தே நான் பார்த்து வரு​கிறேன். இவர் இப்​போது 17 வயதைத் தாண்​டி​யுள்​ளார். அவருக்கு மிகச் சிறந்த எதிர்​காலம் இருக்​கிறது. 10 வயதிலேயே அவருக்​குள் ஒளிந்​திருக்​கும் திறமை​யைக் கண்​டு​கொண்​டேன்” என்​றார். ஆயுஷ் மாத்​ரே​வின் தனிப்​பட்ட பயிற்​சி​யாள​ரான பிர​சாந்த் ஷெட்டி கூறும்​போது, “ஆயுஷ் மாத்ரே மும்​பையி​லிருந்து சிறிது தொலை​விலுள்ள நாளா சோபாரா என்ற பகு​தி​யில் இருந்து மும்​பைக்கு வந்து பயிற்சி பெற்று செல்​வார்.

அவரது வெற்​றிக்கு ஆயுஷின் தந்​தை​யான யோகேஷ் மாத்​ரே​வும் ஒரு காரணம். தினந்​தோறும் சுமார் 6 மணி நேரம் அவர் பயணத்​துக்​காக மட்​டுமே செலவு செய்​வார். ஆயுஷின் குடும்​பம், நடுத்தர வர்க்​கத்​தைச் சேர்ந்​தது. விரார் பகு​தி​யில்​தான் அவர்​கள் வசித்து வந்​தனர். தற்​போது நாளா சோப்ரா பகு​திக்கு மாறி​விட்​டனர்.

யோகேஷ் மாத்​ரே, தனது மகன் ஆயுஷின் கிரிக்​கெட் எதிர்​காலத்​துக்​காக வங்​கி​யில் பணி​யாற்​றிய வேலையை விட்டு விட்​டார். தொடர்ந்து மகனின் கனவை நனவாக்க அவருடன் பயணித்து வரு​கிறார்” என்​றார். வினு மன்​கட் கோப்​பை, மும்​பை​யில் நடை​பெறும் கேஏசிஏ கோப்​பை, இரானி கோப்​பை, ரஞ்சி கோப்​பை, இந்​திய 19 வயதுக்​குட்​பட்​டோர் அணி, விஜய் ஹசாரே கோப்பை என பயணித்து தற்​போது ஐபிஎல் வரை முன்​னேறி விட்​டார். மும்பை அணிக்​காக அவர் விளை​யாடிய பல்​வேறு ஆட்​டங்​களைப் பார்த்து அவரை சிஎஸ்கே அணி தேர்வு செய்​தது.

அவர் இந்​திய அணி​யில் இணை​யும் நாள் வெகுதொலை​வில் இல்லை என்று சொல்​கின்​றனர் கிரிக்​கெட் விமர்​சகர்​கள். மகா​ராஷ்டிர மாநிலத்​தைச் சேர்ந்​தவ​ராக இருந்​தா​லும், கடந்த போட்​டி​யில் மும்பை அணிக்கு எதி​ராக பயமின்றி விளை​யாடி தனது திறமையை வெளிப்​படுத்​தத் தவற​வில்லை என்​பது குறிப்​பிடத்​தகுந்​தது.

பயிற்​சி​யாளர் பிர​சாந்த் ஷெட்டி மேலும் கூறும்​போது, “இந்​திய அணிக்​காக விளை​யாட வேண்​டும் என்​றால், உன்​னுடைய உணவுக் கட்​டுப்​பாட்​டை​யும், உடல் தகு​தி​யை​யும் முன்​னேற்ற வேண்​டும் என்று நான் ஆயுஷிடம் கூறினேன். அதைப் பின்​பற்றி தன்னை மெரு​கேற்றி வரு​கிறார் அவர். பேட்​டிங்​கில் அதிரடி காட்​டும் ஆயுஷ் மாத்​ரே, தன்னை பந்​து​வீச்​சாள​ராக​வும் மெரு​கேற்​றிக் கொள்ள ஆசைப்​படு​கிறார். அவர் விரை​வில் சிறந்த ஆல்​-ர​வுண்​ட​ராக மாற வாய்ப்பு உள்​ளது.

விஜய் ஹசாரே கோப்பை போட்​டி​யில் நாகாலாந்து அணிக்​கெ​தி​ராக மும்பை அணிக்​காக களமிறங்கி 117 பந்​துகளில் 181 ரன்​களை விளாசி​னார். அதை என்​னால் மறக்​கவே முடி​யாது” என்​றார். நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 8 போட்​டிகளில் விளை​யாடி 2-ல் வெற்​றி, 6-ல் தோல்​வியைப் பெற்று பட்​டியலில் கடைசி இடத்​தில் உள்​ளது.

அடுத்து வரும் போட்​டிகளில் சிஎஸ்கே அணி தொடர்ச்​சி​யாக வெற்றி பெற்​றால் மட்​டுமே பிளே ஆப் சுற்​றுக்கு முன்​னேற வாய்ப்பு உள்​ளது. அதற்கு ஆயுஷ் மாத்​ரே​வின் பங்கு பெரு​மள​வில்​ உதவும்​ என்​று சிஎஸ்​கே நிர்​வாகத்தினர்​ நம்​பு​கின்​றனர்​. என்​ன செய்​யப்​ போகிறார்​ ஆயுஷ் மாத்​ரே? பொறுத்​திருந்​து ​பார்​ப்​போம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x