Published : 23 Apr 2025 07:50 AM
Last Updated : 23 Apr 2025 07:50 AM

கொல்கத்தா அணி தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் தோல்வி: சொல்கிறார் கேப்டன் ரஹானே

கொல்கத்தா: குஜ​ராத் டைடன்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் தொடக்க வீரர்​கள் சிறப்​பாக விளை​யா​டாத​தால் தோல்வி கண்​டோம் என்று கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் கேப்​டன் அஜிங்​கிய ரஹானே தெரி​வித்​தார்.

கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற போட்​டி​யில் குஜ​ராத் அணி 39 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் கொல்​கத்தா அணி​யைத் தோற்​கடித்​தது.

முதலில் விளை​யாடிய குஜ​ராத் அணி 20 ஓவர்​களில் 3 விக்​கெட் இழப்​புக்கு 198 ரன்​கள் குவித்​தது. சாய் சுதர்​ஷன் 52 ரன்​களும், ஜாஸ் பட்​லர் 41 ரன்களும், ஷாருக் கான் 11 ரன்​களும் எடுத்​தனர். கேப்​டன் ஷுப்​மன் கில் 55 பந்​துகளில் 90 ரன்​கள் (10 பவுண்​டரி, 3 சிக்​ஸர்) விளாசி​னார். வைபவ் அரோ​ரா, ஹர்​ஷித் ராணா, ஆந்த்ரே ரஸ்​ஸல் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் வீழ்த்​தினர்.

இதையடுத்து 199 ரன்​கள் வெற்றி இலக்​குடன் பேட்​டிங் செய்த கொல்​கத்தா அணி, 20 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 159 ரன்​கள் எடுத்து தோல்வி கண்​டது. சுனில் நரேன் 17, கேப்​டன் ரஹானே 50, வெங்​கடேஷ் ஐயர் 14, ரிங்கு சிங் 17, ஆந்த்ரே ரஸ்​ஸல் 21, அங்​கிரிஷ் ரகு​வன்ஷி 27 ரன்​கள் எடுத்​தனர்.

குஜ​ராத் அணி​யின் பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களைக் கைப்​பற்​றினர். முகமது சிராஜ், இஷாந்த் சர்​மா, வாஷிங்​டன் சுந்​தர், சாய் கிஷோர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைச் சாய்த்​தனர். குஜ​ராத் அணி இது​வரை 8 போட்​டிகளில் விளை​யாடி 6 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​களைப் பெற்று முதலிடத்​தில் உள்​ளது. அதே நேரத்​தில் கொல்​கத்தா அணி 8 போட்​டிகளில் விளை​யாடி 3 வெற்​றி, 5 தோல்வி​களைப் பெற்று 6 புள்​ளி​களு​டன் பட்​டியலில் பின்​தங்​கி​யுள்​ளது.

இந்​தத் தோல்வி குறித்து கொல்​கத்தா கேப்​டன் ரஹானே கூறிய​தாவது: இந்த மைதானத்​தில் 199 ரன்​கள் என்ற இலக்கு சேசிங் செய்​யக்​கூடிய இலக்கு என்று நான் நினைத்​தேன். நாங்​கள் பந்து வீச்​சில் சிறப்​பாக செயல்​பட்​டோம். ஆனால் பேட்​டிங்​கில் எதிர்​பார்த்த ரன்​கள் வரவில்​லை. இந்த ஆட்​டத்​தில் தொடக்க வீரர்​கள் சிறப்​பாக விளை​யா​டாத​தால் தோல்வி கண்​டோம்.

எங்​கள் அணி​யின் தொடக்க வீரர்​கள் சிறப்​பான அதிரடியை இந்த சீசனில் இது​வரை வழங்​க​வில்​லை. தொடக்க ஜோடியை மாற்​றி​யும் பார்த்​தோம். ஆனால், அவர்​கள் இத்​தொடர் முழு​வதுமே தடு​மாற்​ற​மாக விளை​யாடி வரு​கின்​றனர். இதிலிருந்து நாங்​கள் வேக​மாக கற்​றுக்​கொண்டு அடுத்த கட்​டத்​துக்கு முன்​னேற வேண்​டும். நாங்​கள் நடு ஓவர்​களில் அதாவது 7-வது ஓவர் முதல் 15-வது ஓவர் வரை
நன்​றாக பேட்​டிங் செய்ய வேண்​டும். எங்​களு​டைய பந்​து​வீச்​சாளர்​கள் மீது எந்த புகாரும் இல்​லை. வரும் ஆட்​டங்​களில் தொடக்க வீரர்​கள் இன்​னும் சிறப்​பாக விளை​யாட வேண்​டும் என்று விரும்​பு​கிறேன்.

ஒவ்​வொரு போட்​டி​யிலும் நாங்​கள் முன்​னேறு​வதற்கு விஷ​யங்​கள் இருக்​கின்​றன. ஃபீல்​டிங் துறை​யில் 15 முதல் 20 ரன்​களை கட்டுப்படுத்தியிருந்தால், அது வெற்​றி​யில் பெரும் பங்​காற்றி இருக்​கும் என்று நினைக்​கிறேன். களத்​தில் எங்​களு​டைய வீரர்​கள் கடின​மாக உழைக்​கின்​றனர்.

டி20 கிரிக்​கெட்​டில் நீங்​கள் கடந்த காலத்​தைப் பற்றி அதி​கம் சிந்​திக்​காமல் தவறுகளி​லிருந்து பாடங்​களைக் கற்​றுக்​கொண்டு நேர்​மறை​யான மனதுடன் தைரிய​மான வீர​ராக செயல்பட வேண்​டும்.

எங்​களின் தரமான மிடில் ஆர்​டர் பேட்​ஸ்​மேன்​களுக்கு நான் ஆதரவு கொடுக்​கிறேன். ஆனால், வரும் ஆட்​டங்​களில்​ அவர்​கள்​ தைரிய​மாக விளையாட வேண்​டும்​. இவ்​வாறு ரஹானே தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x