Published : 20 Apr 2025 09:20 AM
Last Updated : 20 Apr 2025 09:20 AM

பஞ்சாப்புடன் இன்று மீண்டும் மோதல்: திருப்பியடிக்குமா பெங்களூரு?

முலான்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு சண்​டிகரில் உள்ள முலான்​பூர் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் - ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​கள் பலப்​பரீட்சை நடத்​துகின்​றன.

இரு அணி​களும் நடப்பு சீசனில் 2-வது முறை​யாக மோதுகின்​றன. அதி​லும் ஒரு​நாள் இடைவெளி​யில் விளை​யாடு​கின்​றன. நேற்று முன்​தினம் பெங்​களூரு​வில் உள்ள சின்​ன​சாமி மைதானத்​தில் ஆர்​சிபி - பஞ்​சாப் அணி​கள் மோதி​யிருந்​தன. மழை காரண​மாக 14 ஓவர்​களாக நடத்​தப்​பட்ட இந்த ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணியை 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தது பஞ்​சாப் கிங்​ஸ்.

இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த ஆர்​சிபி அணியை தனது அற்​புத​மான பந்து வீச்​சால் 95 ரன்​களுக்​குள் மட்​டுப்​படுத்​தி​யது பஞ்​சாப் அணி. டிம் டேவிட் 26 பந்​துகளில், 50 ரன்​கள் விளாசி​யதன் காரண​மாகவே ஆர்​சிபி அணி​யால் சற்று கவுர​வ​மான ஸ்கோரை எடுக்க முடிந்​திருந்​தது. ஆடு​களத்​துக்கு தகுந்​த​வாறு தகவ​மைத்​துக் கொண்டு விளை​யா​டாத​தால் ஆர்​சிபி அணி சீரான இடைவெளி​யில் விக்​கெட்​களை தாரை​வார்த்​தது.

பில் சால்ட் (4), விராட் கோலி (1), லியாம் லிவிங்​ஸ்​டன் (4), ஜிதேஷ் சர்மா (2), கிருணல் பாண்​டியா (1), மனோஜ் பன்​டேஜ் (1), யாஷ் தயாள் (0), புவனேஷ்வர் குமார் (8) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்​னில் நடையை கட்​டினர். சற்று தாக்​குப்​பிடித்து விளை​யாடிய கேப்டன் ரஜத் பட்​டி​தார் 23 ரன்​கள் சேர்த்​தார். ஆர்​சிபி எடுத்த 95 ரன்​களில் டிம் டேவிட், ரஜத் பட்​டி​தார் ஆகியோர் கூட்​டாக சேர்த்​தது 73 ரன்​களாக அமைந்​திருந்​தது.

ஆர்சிபி அணியை கட்டுப்படுத்தியதில் மார்கோ யான்சன், யுவேந்திர சாஹல் ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர். யான்சன் 3 ஓவர்களை வீசி 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். அதேவேளையில் யுவேந்திர சாஹல் 3 ஓவர்களை வீசி 11 ரன்களை வழங்கி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

96 ரன்​கள் இலக்கை விரட்​டிய பஞ்​சாப் அணி தொடக்​கத்​தில் சற்று தடு​மாறி​னாலும் 12.1 ஓவர்​களில் 5 விக்​கெட்​களை இழந்து 98 ரன்​கள் எடுத்து வெற்​றிக் கோட்டை கடந்​தது. நடப்பு சீசனில் சொந்த மண்​ணில் ஆர்​சிபி அணி​யின் ஹாட்​ரிக் தோல்​வி​யாக இது அமைந்​தது. அந்த அணி இங்கு விளை​யாடிய 3 ஆட்​டங்​களி​லும் வெற்​றியை வசப்​படுத்​த​வில்​லை.

பஞ்​சாப் அணி​யின் பேட்​டிங்​கில் பிரியன்ஷ் ஆர்யா 16, பிரப்​சிம்​ரன் சிங் 13, ஸ்ரேயஸ் ஐயர் 7, ஜோஷ் இங்​லிஷ் 14 ரன்​களில் நடையை கட்​டினர். 55 ரன்​களுக்கு 4 விக்​கெட்​களை இழந்து தவித்த நிலை​யில் இடது கை பேட்​ஸ்​மே​னான நேஹல் வதேரா 19 பந்​துகளில், 33 ரன்​கள் சேர்த்து அணியை வெற்​றிக் பாதைக்கு அழைத்து சென்​றார். நெருக்​கடி​யான நேரத்​தில் சுயாஷ் சர்மா பந்​துகளில் 2 சிக்​ஸர்​களை பறக்​க​விட்டு அசத்​தி​யிருந்​தார் நேஹல் வதே​ரா.

பஞ்​சாப் அணிக்கு இது 5-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி 10 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளை​யில் 7 ஆட்​டங்​களில் 3-வது தோல்​வியை சந்​தித்த ஆர்​சிபி பட்​டியலில் 4-வது இடத்​தில் உள்​ளது. இந்​நிலை​யில் இரு அணி​களும் மீண்​டும் இன்று பலப்​பரீட்சை நடத்​துகின்​றன. இந்த ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணி பேட்​டிங் மற்​றும் பந்து வீச்​சில் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தி​னால் மட்​டுமே வெற்றி பெற்று பதிலடி கொடுப்​பது சாத்​தி​யப்​படும்.

அதேவேளை​யில் அர்​ஷ்தீப் சிங், சேவியர் பார்ட்​லெட், மார்கோ யான்​சன், யுவேந்​திர சாஹல் ஆகியோரை உள்​ளடக்​கிய பஞ்​சாப் அணி​யின் பந்து வீச்சு துறை மீண்​டும் ஒமுறை ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் வரிசைக்​கு சவால்​ அளிக்​க ஆயத்​த​மாக இருக்​கக்​கூடும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x