Published : 19 Apr 2025 11:54 AM
Last Updated : 19 Apr 2025 11:54 AM
பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 34-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வசம் தோல்வியை தழுவியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அது குறித்து அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் என்ன சொல்லி உள்ளார் என பார்ப்போம்.
நடப்பு சீசனில் சொந்த மண்ணில் மூன்று ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ளது ஆர்சிபி. அந்த அணி பதிவு செய்துள்ள நான்கு வெற்றிகளும் பிற அணிகளின் மைதானங்களில் பெற்றவை. நேற்று (ஏப்.18) மழை காரணமாக பெங்களூரு மற்றும் பஞ்சாப் இடையிலான ஆட்டம் தலா 14 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி 12.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
“ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளம் மிகவும் நிதானமாக இருந்தது. இரண்டு ஃபேஸாக இருந்தது. ஆனாலும் ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். பார்ட்னர்ஷிப் அமைப்பது மிகவும் முக்கியம். விரைந்து விக்கெட்டுகளை இழந்து விட்டோம். இந்த ஆட்டம் எங்களுக்கு பெரிய பாடம் புகட்டி உள்ளது. ஆட்டத்தின் சூழலை கருதி தேவ்தத் படிக்கல்லை நாங்கள் தேர்வு செய்யவில்லை.
விக்கெட் மோசமாக இருந்தது என சொல்லும் அளவுக்கு இல்லை. மழை காரணமாக நீண்ட நேரம் போர்த்தி வைக்கப்பட்டது. அது பஞ்சாப் பந்து வீச்சாளர்களுக்கு உதவியது. விக்கெட் எப்படி இருந்தாலும் அதை கருத்தில் கொள்ளாமல் நாங்கள் சிறப்பாக பேட் செய்து, வெற்றிக்கான ரன்களை ஸ்கோர் போர்டில் போட்டிருக்க வேண்டும். எங்கள் அணியின் பந்து வீச்சு நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்படுகிறது. அது எங்களுக்கு பாசிட்டிவ். பேட்ஸ்மேன்களும் இன்டென்ட் உடன் விளையாடினர். எங்கள் பிழைகளை நாங்கள் திருத்திக் கொள்வோம்” என ரஜத் பட்டிதார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT