Published : 13 Apr 2025 11:58 AM
Last Updated : 13 Apr 2025 11:58 AM
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள சிஎஸ்கே, 1 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் 10-வது இடத்தில் உள்ளது.
18-வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. மொத்தம் 74 போட்டிகள். இதில் 70 ஆட்டங்கள் லீக் சுற்றில் நடைபெறுகிறது. குவாலிபையர் 1 மற்றும் 2, எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி அடுத்த சுற்றில் நடைபெறும். புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கின்ற அணிகள்தான் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
அதனால் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது. வெற்றி பெறுவது, அதற்கான புள்ளிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் அணிகள் இடம்பெறும். அந்த வகையில் நடப்பு சீசனில் 4 ஆட்டங்களில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ள டெல்லி கேபிட்டல்ஸ் அணி, 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத் அணி ஆறு ஆட்டங்களில் விளையாடி நான்கு வெற்றிகளுடன் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள லக்னோவும் ஆறு ஆட்டங்களில் நான்கு வெற்றிகளை பதிவு செய்துள்ளது. ரன் ரேட் அடிப்படையில் முதல் மூன்று இடங்களில் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இதே போல கொல்கத்தா, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் தலா ஆறு புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. அந்த அணிகளும் ரன் ரேட் அடிப்படையில் தான் நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது இடங்களை பிடித்துள்ளன. ஏழு மற்றும் எட்டாவது இடத்தில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.
4 ஆட்டங்களில் தொடர் தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அதிரடி ஆட்டம் மூலம் வீழ்த்தி கடைசி இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ‘கம்பேக்’ என்றால் அது இப்படி இருக்க வேண்டும் என சொல்லும் வகையில் ஹைதராபாத்தின் ஆட்டம் அமைந்திருந்தது.
பார்க்க: அதிர வைத்த அபிஷேக் சர்மா: 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி | SRH vs PBKS
கடைசி இரண்டு இடங்களில் ஐபிஎல் கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற அணிகள் என அறியப்படும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளன. இரண்டு அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. இருப்பினும் ரன் ரேட் அடிப்படையில் சிஎஸ்கே கடைசி இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியல்
(சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆட்டத்துக்கு பிறகான அப்டேட்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT