Published : 13 Apr 2025 08:44 AM
Last Updated : 13 Apr 2025 08:44 AM

பெங்களூரு டாப் ஆர்டருக்கு... ஆர்ச்சர் சவால் காத்திருக்கு…

ஜெய்ப்பூர்: ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் - ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு அணி​கள் மோதுகின்​றன. இரு அணி​களும் தங்​களது கடைசி ஆட்​டத்​தில் தோல்​வியை சந்​தித்து இருந்​தன. பெங்​களூரு அணி 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யிட​மும், ராஜஸ்​தான் அணி 58 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யிட​மும் வீழ்ந்​திருந்​தன.

பெங்​களூரு அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 5-வது இடத்​தில் உள்​ளது. ராஜஸ்​தான் அணி 5 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​கள் பெற்று 4-வது இடத்​தில் உள்​ளது. தொடக்க ஆட்​டத்​தில் 76 ரன்​கள் வழங்கி மோச​மான சாதனை படைத்​திருந்த ராஜஸ்​தான் அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான ஜோப்ரா ஆர்ச்​சர் அதன் பின்​னர் அடுத்​தடுத்த ஆட்​டங்​களில் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறனை வெளிப்​படுத்தி வரு​கிறார்.

பஞ்​சாப் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 25 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 3 விக்​கெட்​களை வீழ்த்தி அவர், அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார். அந்த ஆட்​டத்​தில் 148.6 கிலோ மீட்​டர் வேகத்​தில் ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய பந்​தில் ஸ்ரேயஸ் ஐயர் ஸ்டெம்​பு​கள் சிதற ஆட்​ட​மிழந்து இருந்​தார். மேலும் குஜ​ராத் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 152.3 கிலோ மீட்​டர் வேகத்​தி​லும் பந்து வீசி மிரட்​டி​யிருந்​தார். இந்த ஆட்​டத்​தில் அவர் 147.7 கிலோ மீட்​டர் வேகத்​தில் வீசிய இன்​ஸ்​விங் பந்​தில் ஷுப்​மன் கில் போல்​டாகி​யிருந்​தார்.

இதனால் ஜோப்ரா ஆர்ச்​சர் இன்​றைய ஆட்​டத்​தில் பெங்​களூரு அணி​யின் தொடக்க வீரர்​களான பில் சால்ட், விராட் கோலி ஜோடிக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. நடப்பு சீசனில் விராட் கோலி 186 ரன்​களும், பில் சால்ட் 143 ரன்​களும் சேர்த்​துள்​ளனர். ஜோப்ரா ஆர்ச்​சருக்கு உறு​துணை​யாக சந்​தீப் சர்மா செயல்​படக்​கூடும். எனினும் இவர்​களை தவிர்த்து அணி​யில் மற்ற பந்து வீச்​சாளர்​களிடம் இருந்து இது​வரை சிறந்த செயல்திறன் வெளிப்​பட​வில்​லை. இதனை பெங்​களூரு அணி பயன்​படுத்​திக் கொள்​ளக்​கூடும்.

பெங்​களூரு அணி​யின் பேட்​டிங்​கில் கேப்​டன் ரஜத் பட்​டி​தார், தேவ்​தத் படிக்​கல் ஆகியோ​ரும் அதிரடி​யில் பலம் சேர்க்​கின்​றனர். டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்​டன் ஆகியோ​ரும் பின்​வரிசை​யில் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர். பந்து வீச்​சில் ஜோஷ் ஹேசில்​வுட் பலம் சேர்க்​கக்​கூடும்.

ராஜஸ்​தான் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் குஜ​ராத் அணிக்கு எதி​ராக 218 ரன்​கள் இலக்கை துரத்​திய நிலை​யில் 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து இந்​தது. தொடக்க வீர​ரான யஷஸ்வி ஜெய்​ஸ்​வால், ரியான் பராக், நித்​திஷ் ராணா ஆகியோரிடம் இருந்து சீரான செயல் திறன் வெளிப்​ப​டாதது பலவீன​மாக உள்​ளது. சாம்​சன், ஷிம்​ரன் ஹெட்​மயர் மட்​டுமே நிலை​யான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்​த செயல்​ ​திறன்​ வெளிப்​படக்​கூடும்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x