Published : 03 Apr 2025 10:14 AM
Last Updated : 03 Apr 2025 10:14 AM
புதுடெல்லி: இந்த ஆண்டில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.
நடப்பாண்டில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகள் தொடர்பான விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று அறிவித்தது.
அதன்படி அக்டோபரில் இந்தியாவுக்கு வரும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இந்தியாவுடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அக். 2-ம் தேதியும், 2-வது போட்டி கொல்கத்தாவில் அக்டோபர் 10-ம் தேதியும் தொடங்க உள்ளது. இதைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டெல்லியில் நவம்பர் 14-ம் தேதியும், 2-வது போட்டி குவாஹாட்டியில் நவம்பர் 22-ம் தேதியும் தொடங்க உள்ளது.
நவம்பர் 30-ம் தேதி, 3 ஆட்டங்கள் கொண்ட சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்குகிறது. ராஞ்சியில் நவம்பர் 30-ம் தேதி முதல் ஆட்டமும், ராய்ப்பூரில் டிசம்பர் 3-ம் தேதி 2-வது ஆட்டமும், டிசம்பர் 6-ம் தேதி விசாகப்பட்டினத்தில் 3-வது ஆட்டமும் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து 5 சர்வதேச டி20 ஆட்டங்களில் இரு அணிகளும் பங்கேற்கவுள்ளன.
முதலாவது டி20 போட்டி டிச.9-ம் தேதி கட்டாக்கிலும், 2-வது டி20 போட்டி டிசம்பர் 11-ல் புதிய சண்டிகரிலும், 3-வது டி20 போட்டி டிசம்பர் 14-ம் தேதி தரம்சாலாவிலும், 4-வது டி20 போட்டி டிசம்பர் 17-ம் தேதி லக்னோவிலும், 5-வது டி20 போட்டி டிசம்பர் 19-ம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT