Published : 03 Apr 2025 09:39 AM
Last Updated : 03 Apr 2025 09:39 AM

‘மும்பை அணிக்கு கோப்பையை வென்று தருவதே இலக்கு’ - ரோஹித் சர்மா உறுதி

மும்பை: மும்பை அணிக்கு மீண்​டும் கோப்பையை வென்று தரு​வதே எங்​களது இலக்​காக உள்​ளது என்று அந்த அணி​யின் நட்​சத்​திர வீரர் ரோஹித் சர்மா தெரி​வித்​தார். இந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி, இது​வரை 3 போட்​டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, 2 தோல்வி​களைப் பெற்​றுள்​ளது. வரும் 4-ம் தேதி மும்​பை, லக்னோ சூப்​பர் ஜெயன்ட்ஸ் அணி​யுடன் மோதவுள்​ளது.

இந்​நிலை​யில் மும்பை அணி​யின் முன்​னாள் கேப்​டன் ரோஹித் சர்மா கூறிய​தாவது: ஐபிஎல் போட்​டிகளின் தொடக்​கத்​தில் நான் நடு​வரிசை​யில் களமிறங்கி விளை​யாடினேன். இப்​போது, தொடக்க வீர​ராக இருக்​கிறேன். முதலில் நான் கேப்​ட​னாக இருந்​தேன். இப்​போது, கேப்​ட​னாக இல்​லை. நாங்​கள் கோப்​பையை வென்ற சீசன்​களில் எங்​களது அணி வீரர்​களாக இருந்​தவர்​கள் இப்​போது பயிற்​சி​யாள​ராக உள்​ளனர்.

எனவே, வீரர்​களின் பங்கு வீரர், பயிற்​சி​யாளர் என மாறி​விட்​டது. ஆனால், வீரர்​களின் மனநிலை அப்​படியே​தான் உள்​ளது. இந்த அணிக்​காக நான் என்ன செய்ய விரும்​பு​கிறேன் என்​பது மாற​வில்​லை. ஆட்​டங்​களை​யும் கோப்​பைகளை​யும் வெல்​வதே அது.

அதற்​காகவே மும்பை இந்​தி​யன்ஸ் பெயர் பெற்​றது. பல ஆண்​டு​களாக, நாங்​கள் கோப்​பைகளை வென்​றுள்​ளோம். யாரும் நம்​பாத சூழ்​நிலைகளில் இருந்து ஆட்​டங்​களை மாற்​றியமைத்து வெற்றி கண்​டுள்​ளோம்.

எங்​கள் அணி​யில் உள்ள பல இளம் வீரர்​களும் சிறந்த திறமை​களை கொண்​டுள்​ளனர். அவர்​களு​டன் விளை​யாட நான் ஆவலுடன் காத்​திருக்​கிறேன். டாடா ஐபிஎல் கோப்​பையை வென்று மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு மீண்​டும் பெரு​மை​யைக் கொண்டு வரு​வதே எனது இலக்​காக உள்​ளது.

இவ்​வாறு ரோஹித்​ சர்​மா கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x