Published : 02 Apr 2025 08:33 AM
Last Updated : 02 Apr 2025 08:33 AM

டேபிள் டென்னிஸ் போட்டியில் இணையும் கொல்கத்தா அணி

புதுடெல்லி: அல்​டிமேட் டேபிள் டென்​னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் புதிய உரிமை​யாள​ராக கொல்​கத்தா தண்​டர்​பிளேட்ஸ் அணி இணைந்​துள்​ளது.

அல்​டிமேட் டேபிள் டென்​னிஸ் சீசன் 6-வது போட்​டிகள் வரும் மே 29 முதல் ஜூன் 15 வரை அகம​தா​பாத்​தில் நடை​பெறவுள்​ளன. இந்த டேபிள் டென்​னிஸ் போட்டி அகம​தா​பாத்​தில் நடத்​தப்​படு​வது இதுவே முதல் முறை​யாகும்.

இந்​நிலை​யில், இந்த சீசனில் புதி​தாக, யுனி​காப்ஸ் குழு​மம் மற்​றும் எம்வி​காஸ் குழு​மத்​தின் இணை உரிமை​யாள​ரான கொல்​கத்தா தண்​டர்​பிளேட்ஸ் இணைந்​துள்​ளது. மேலும் கூடு​தலாக, பிபிஜி அணி, புனே ஜாகு​வார்ஸ் என்ற புதிய பெயரில் இந்த சீசனில் களம் இறங்​கு​கிறது.

கடந்த 2023, 2024 யுடிடி சீசன்​களில் கோவா சாலஞ்​சர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x