Published : 02 Apr 2025 08:25 AM
Last Updated : 02 Apr 2025 08:25 AM

மோசமான பேட்டிங்கால் மும்பையிடம் தோல்வி அடைந்தோம்: கொல்கத்தா கேப்டன் ரஹானே

மும்பை: மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் மோச​மான பேட்​டிங்​கால் தோல்வி அடைந்​தோம் என்று கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி​யின் கேப்​டன் அஜிங்​கிய ரஹானே தெரி​வித்​தார்.

மும்பை வான்​கடே மைதானத்​தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி 8 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் கொல்​கத்தா அணியை வீழ்த்​தி​யது.

முதலில் விளை​யாடிய கொல்​கத்தா அணி 16.2 ஓவர்​களில் அனைத்து விக்​கெட்​களை​யும் இழந்து 116 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அணி​யில் அதி​கபட்​ச​மாக அங்​கிரிஷ் ரகு​வன்ஷி 26, ரமன்​தீப் சிங் 22 ரன்​கள் எடுத்​தனர். மற்​றவர்​கள் சொற்ப ரன்​களில் வீழ்ந்​தனர். பின்​னர் விளை​யாடிய மும்பை அணி 12.5 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 121 ரன்​கள் எடுத்து 8 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது. ரோஹித் சர்மா 13, ரியான் ரிக்​கெல்​டன் 62, வில் ஜேக்ஸ் 16, சூர்​யகு​மார் யாதவ் 27 ரன்​கள் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர்.

4 விக்​கெட்​களை வீழ்த்​திய மும்பை அணி​யின் அறி​முக வீரர் அஸ்​வனி குமார் ஆட்​ட​நாயக​னாகத் தேர்வு செய்​யப்​பட்​டார். இது​வரை மும்பை அணி 3 போட்​டிகளில் விளை​யாடி 2 தோல்​வி, ஒரு வெற்​றியைப் பெற்​றுள்​ளது. அதே​போல், கொல்​கத்தா அணி​யும் 3 போட்​டிகளில் விளை​யாடி ஒரு வெற்​றி, 2 தோல்வி​களைப் பெற்​றுள்​ளது.

இந்​தத் தோல்வி குறித்து கொல்​கத்தா கேப்​டன் ரஹானே கூறிய​தாவது: இந்த ஆட்​டத்​தில் நாங்​கள் சிறப்​பாக விளை​யாட வில்​லை. மோச​மான பேட்​டிங் காரண​மாக தோல்வி அடைந்​தோம். எங்​களது பேட்​ஸ்​மேன்​கள் அனை​வருமே மோச​மாக விளை​யாடி விக்​கெட்டை இழந்​தனர். ஆனால், மும்பை ஆடு​களம் ரன்​குவிக்க ஏற்​ற​தாக இருந்​தது. இந்த ஆடு​களத்​தில் 180 முதல் 190 ரன்​கள் எடுத்​திருந்​தால் அது சிறப்​பான​தாக இருந்​திருக்​கும். பவர்​பிளே ஓவர்​களில் 4 விக்​கெட்​களை நாங்​கள் இழந்​தது தோல்விக்​குக் காரண​மாக அமைந்​து​விட்​டது. யாராவது ஒரு பேட்​ஸ்​மே​னாவது களத்​தில் நீண்ட நேரம் நின்​றிருந்​தால் ஸ்கோர் அதி​க​மாக வந்​திருக்​கும்.

ஆனால், எங்​களது பேட்​டிங் எதிர்​பார்த்​த​படி அமைய​வில்​லை. இந்​தத் தோல்​வியி​லிருந்து பாடம் கற்​றுக் கொண்​டுள்ள நாங்​கள் விரை​வில் வெற்​றிப் பாதைக்​குத் திரும்​புவோம்.

அதே​போல பவுலிங்​கிலும் நாங்​கள் சிறப்​பாக செயல்​பட​வில்​லை. எங்​களது பந்​து​வீச்​சாளர்​கள் சிறப்​பாக பந்து வீச முயன்​றனர். ஆனாலும், மும்பை பேட்​ஸ்​மேன்​கள் அதிரடி​யாக விளை​யாடி வெற்​றியைப்​ பெற்​றனர்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x