Published : 01 Apr 2025 09:50 AM
Last Updated : 01 Apr 2025 09:50 AM

களத்துக்குள் வருவதை தோனியே முடிவு செய்கிறார்: சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கம்

சென்னை: ஆடு​களத்​துக்​குள் எந்த ஓவரில் விளை​யாட வரு​வது என்ற முடிவை எம்​.எஸ்.தோனி மட்​டுமே எடுக்​கிறார் என்று சிஎஸ்கே அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் ஸ்டீபன் பிளெமிங் விளக்​கம் அளித்​துள்​ளார்.

குவாஹாட்​டி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்​கெ​தி​ரான ஐபிஎல் லீக் போட்​டி​யில் சிஎஸ்கே அணி 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டது. சிஎஸ்கே அணி​யின் மிகச்​சிறந்த ஃபினிஷர் என்று பெயரெடுத்த எம்​.எஸ். தோனி, இந்த ஆட்​டத்​தில் 11 பந்​துகளில் 16 ரன்​கள் மட்​டுமே எடுத்து வீழ்ந்​தார்.

ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணிக்கு எதி​ரான போட்​டி​யின்​போது தோனி 9-ம் வரிசை​யில் களம் இறங்​கி​னார். இது அப்​போது அனை​வ​ராலும் விமர்சிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்​தினம் நடை​பெற்ற ராஜஸ்​தான் போட்​டி​யின்​போது தோனி, 7-வது வீர​ராக களம் புகுந்​தார். இருந்​த​போ​தி​லும் அவரால் சிஎஸ்கே அணியை வெற்​றிக்கு அழைத்​துச் செல்ல முடிய​வில்​லை. கடைசி ஓவரின் முதல் பந்​திலேயே ஆட்​ட​மிழந்​தார் தோனி.

இதுகுறித்து சிஎஸ்கே அணி​யின் தலைமை பயிற்​சி​யாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறிய​தாவது: தோனி​யின் பேட்​டிங் வரிசை போட்​டி​யின் சூழ்​நிலை மற்​றும் நேரம் சார்ந்​த​தாக உள்​ளது. இது குறித்த முடிவை தோனி​தான் எடுக்​கிறார். ஆடு​களத்​துக்​குள் எப்​போது வரு​வது என்​பதை அவரே முடிவு செய்​கிறார்.

அவரது உடல் மற்​றும் முழங்​கால் இதற்கு முன்பு இருந்​தது போல் இல்​லை. அவர் நன்​றாக நடந்​தா​லும் அதில் சில பிரச்​சினை​கள் உள்​ளன. அவரால் தொடர்ந்து 10 ஓவர்​கள் நின்று பேட்​டிங் செய்​வது முடி​யாது. அவர் அணிக்​காக என்ன செய்ய முடி​யும் என்​பதை சிந்​தித்து செயல்​பட்டு வரு​கிறார் என்​று​தான் நான் கூறு​வேன். இன்​றைய போட்டி போல, ஆட்​டம் சமநிலை​யில் இருந்​தால் அவர் சற்று முன்​ன​தாகவே பேட்​டிங் செய்ய ஆடு​களத்​துக்​குள் வரு​வார். இதனால், மற்ற வீரர்​கள் தங்​களின் வாய்ப்​பு​களை பயன்​படுத்​து​வதற்கு வாய்ப்பு
கிடைக்​கும்.

இது தொடர்​பாக நான் கடந்த ஆண்டே தெரி​வித்​திருந்​தேன். எம்​.எஸ். தோனி எங்​களுக்கு மிக​வும் மதிப்புமிக்க வீரர். தலைமை பண்பு மற்​றும் விக்​கெட் கீப்​பிங்​கில் அவர் சிறந்து விளங்​கு​கிறார்​.

இவ்​வாறு ஸ்டீபன்​ பிளெமிங்​ தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x