Published : 01 Apr 2025 09:39 AM
Last Updated : 01 Apr 2025 09:39 AM

ராஜஸ்தான் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்

குவாஹாட்டி: மெதுவாக பந்துவீசியதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டன் ரியான் பராகுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

18-வது ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் குவாஹாட்டியில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்த லீக் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் ரியான் பராகுக்கு ஐபிஎல் ஆணையம் சார்பில் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. அடுத்த போட்டியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு சாம்சன் கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x