Published : 22 Mar 2025 07:04 PM
Last Updated : 22 Mar 2025 07:04 PM

ஐபிஎல் 2025 பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எவை? - ஜாம்பவான்கள் கணிப்பு

சென்னை: ஐபிஎல் 2025 சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களது கணிப்பை தெரிவித்துள்ளனர்.

10 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போன்ற அணிகள் முதல் முறையாக பட்டம் வெல்லும் முனைப்புடன் களம் கண்டுள்ளன. இதில் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இது 18-வது ஐபிஎல் சீசன் ஆகும்.

வீரேந்திர சேவாக்: மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ஆடம் கில்கிறிஸ்ட்: பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ்
ரோஹன் கவாஸ்கர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ்
ஹர்ஷா போக்ளே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஷான் பொலாக்: மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ்
மனோஜ் திவாரி: சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சைமன் டஃவுல்: சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ்
மைக்கேல் வாகன்: குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x