Published : 19 Mar 2025 06:40 AM
Last Updated : 19 Mar 2025 06:40 AM

2-வது டி 20 போட்டியிலும் பாக். தோல்வி

டுனிடின்: நியூஸிலாந்து - பாகிஸ்​தான் அணி​கள் இடையி​லான 2-வது டி 20 கிரிக்​கெட் போட்டி நேற்று டுனிடின் நகரில் நடை​பெற்​றது. மழை காரண​மாக 15 ஓவர்​களை கொண்​ட​தாக நடத்​தப்​பட்ட இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 135 ரன்கள எடுத்​தது. அதி​கபட்​ச​மாக கேப்​டன் சல்​மான் ஆகா 28 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 46 ரன்​களும், ஷதப் கான் 14 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 26 ரன்​களும் சேர்த்​தனர். நியூஸிலாந்து அணி தரப்​பில் ஜேக்​கப் டஃபி, பென் சியர்​ஸ்,ஜேம்ஸ் நீஷாம், இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை வீழ்த்​தினர். 136 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 13.1 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 137 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. டிம் ஷெய்​பர்ட் 22 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​களும், ஃபின் ஆலன் 16 பந்​துகளில், 5 சிக்​ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 38 ரன்​களும் விளாசினர்.

முகமது அலி வீசிய 2-வது ஓவரில் ஃபின் ஆலன் 3 சிக்​ஸர்​களை​யும், ஷாகின் ஷா அப்​ரிடி வீசிய அடுத்த ஓவரில் டிம் ஷெய்​பர்ட் 4 சிக்​ஸர்​களை​யும் பறக்​க​விட்டு மிரளச் செய்​தனர். 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரில் 2-0 என முன்​னிலை வகிக்​கிறது. கிறைஸ்ட்​சர்ச்​சில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 3-வது ஆட்​டம் ஆக்​லாந்​தில் வரும் 21-ம் தேதி நடை​பெறுகிறது.

இந்தியா - மாலத்தீவுகள் இன்று மோதல்: இந்தியா - மாலத்தீவுகள் அணிகள் இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி ஷில்லாங்கில் உள்ள நேரு விளையாட்டரங்கில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் 40 வயதான சுனில் ஷேத்ரி களமிறங்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஓய்வை அறிவித்த அவர், இந்த மாதத்தின் தொடக்கத்தில் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்குவதாக அறிவித்தார்.
வரும் 25-ம் தேதி ஏஃஎப்சி ஆசிய கோப்பை தகுதி சுற்றில் இந்தியா, வங்கதேசத்தை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த ஆட்டத்துக்கான சிறந்த பயிற்சியாக மாலத்தீவுகள் அணிக்கு எதிரான போட்டி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஷபாலி வர்மா: 23 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஹரியானா - கர்நாடகா அணிகள் மோதின. இதில் ஹரியானா அணிக்காக களமிறங்கிய ஷபாலி வர்மா பந்து வீச்சில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான அவர், 44-வது ஓவரின் கடைசி இரு பந்துகளில் கர்நாடக அணியைச் சேர்ந்த சலோனி, சவுமியா ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். இதன் பின்னர் 46-வது ஓவரின் முதல் பந்தில் நிமிதா டிஸோசாவை ஆட்டமிழக்கச் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் ஹரியானா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x