Published : 22 Feb 2025 03:14 AM
Last Updated : 22 Feb 2025 03:14 AM
புவனேஷ்வர்: மகளிருக்கான புரோ ஹாக்கி லீக்கில் நேற்று புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இநதியா - ஜெர்மனி அணிகள் மோதின. இதில் ஜெர்மனி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் அமேலி வோர்ட்மேன் (3-வது நிமிடம்), சோபியா ஸ்வாபே (18 மற்றும் 47-வது நிமிடம்), ஜோகான் ஹாச்சன்பெர்க் (59-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணி தனது ஆட்டத்தில் இன்று ஜெர்மனியுடன் மீண்டும் மோதுகிறது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி 6 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி அணி 6 ஆட்டங்களில் விளையாடி 7 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT