Published : 20 Feb 2025 07:40 AM
Last Updated : 20 Feb 2025 07:40 AM

கால் இறுதி சுற்றில் நெடுஞ்செழியன் ஜோடி

புனே: மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் ஜோடி டென் மார்க்கின் ஹோல்ம்கிரென், எல்மர் மோலர் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 6-3, 7-6 (7) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கால் இறுதி சுற்றில் ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி மற்றொரு இந்திய ஜோடியான சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடியை எதிர்கொள்கிறது. சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி 6-0, 6-4 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் மைக்கேல் கீர்ட்ஸ், இங்கிலாந்தின் பில்லி ஹாரிஸ் ஜோடியை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் நுழைந்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x