Published : 19 Feb 2025 07:58 AM
Last Updated : 19 Feb 2025 07:58 AM
புவனேஷ்வர்: மகளிருக்கான எஃப்ஐஹெச் புரோ ஹாக் லீக்கில் நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - ஸ்பெயின் அணிகள் மோதின.
இதில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் பல்ஜீத் கவுர் (19-வது நிமிடம்), சாக்சி ராணா (38-வது நிமிடம்), ருதுஜா ததாசோ பிசால் (45-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். ஸ்பெயின் அணி சார்பில் சோபியா ரோகோஸ்கி (21-வது நிமிடம்), எஸ்டெல் பெட்சோம் (25 மற்றும் 49-வது நிமிடம்), லூசியா ஜிமென்ஸ் (52-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT