Published : 18 Feb 2025 07:37 AM
Last Updated : 18 Feb 2025 07:37 AM
சென்னை: அகில இந்திய சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் பிரிவில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஆர்எஸ்பி சென்னை 25-20, 25-23, 25-20 என்ற செட் கணக்கில் பாண்டிச்சேரியையும், மத்திய தலைமைச் செயலக அணி 16-25, 25-17, 19-25, 25-20 16-14, என்ற செட் கணக்கில் ஆர்எஸ்பி கொச்சி அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
மகளிர் பிரிவு அரை இறுதியில் ஆர்எஸ்பி சென்னை 25-8, 25-11, 25-5 என்ற செட் கணக்கில் டெல்லி அணியையும், ஆர்எஸ்பி பெங்களூரு 25-15, 25-7, 25-13 என்ற செட் கணக்கில் ஆர்எஸ்பி கொல்கத்தா அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இரு பிரிவிலும் இன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT