Published : 16 Feb 2025 07:52 AM
Last Updated : 16 Feb 2025 07:52 AM

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர்: முகமதுவை ரூ.18.40 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது சேலம் அணி

சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் வரும் ஜூலையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதான வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஏலத்துக்காக 691 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் இருந்து தொடரில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். அதிகபட்சமாக ஆல்ரவுண்டர் எம்.முகமதுவை சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி ரூ.18.40 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.

மேலும் அந்த அணி ஆல்ரவுண்டர்கள் ஹரி நிஷாந்த் (ரூ.12 லட்சம்), நித்திஷ் ராஜகோபால் (ரூ.10 லட்சம்), பேட்ஸ்மேன் பூபதி வைஷ்ண குமார் (ரூ.6.80 லட்சம்), பந்து வீச்சாளர் அஜித் ராம் (ரூ.5 லட்சம்), விக்கெட் கீப்பர்கள் ஈஸ்வர் (ரூ.4 லட்சம்), கவின் (ரூ.2.20 லட்சம்), பந்து வீச்சாளர் ரகில் சஞ்ஜய் ஷா (ரூ.லட்சம்) ஆகியோரையும் ஏலம் எடுத்தது.

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் ஆல்ரவுண்டர் விஜய் சங்கரை ரூ.18 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. தொடர்ந்து ஆல்ரவுண்டர் ஸ்வப்னில் சிங் (ரூ.10.80 லட்சம்), பந்துவீச்சாளர் ரோஹித் சுதார் (ரூ.7.95 லட்சம்), ஆல்ரவுண்டர்கள் மோஹித் ஹரிகரன் (ரூ.5.20 லட்சம்), அக்ரம் கான் (ரூ.1.10 லட்சம்) ஆகியோரும் வாங்கியது சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி.

திண்டுக்கல் டிராகன் அணி ஆல்ரவுண்டரான ஹன்னியை ரூ.11.70 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மேலும் பந்துவீச்சாளர் பெரியசாமி (ரூ.9.80 லட்சம்), ஆல்ரவுண்டர் மான் கே பாஃப்னா (ரூ.5.70 லட்சம்), பேட்ஸ்மேன்கள் விமல் குமார் (ரூ.3.80 லட்சம்), ஆர்.கே.ஜெயந்த் (ரூ.1.15 லட்சம்) ஆகியோரையும் ஏலம் எடுத்தது.

திருப்பூர் தமிழன் அணி பந்துவீச்சாளர் ஆ.சிலம்பரசனை ரூ.9 லட்சத்துக்கு வாங்கியது. மேலும் அந்த அணி பேட்ஸ்மேன் பிரதோஷ் ரஞ்ஜன் பால் (ரூ.4.40 லட்சம்), சசிதேவ் (ரூ.3.70 லட்சம்), பந்து வீச்சாளர்கள் பிரணவ் ராகவேந்திரா (ரூ.2.75 லட்சம்), மோகன் பிரசாத் (ரூ.1 லட்சம்), ஆல்ரவுண்டர் ராதாகிருஷ்ணன் (ரூ.1 லட்சம்) ஆகியோரையும் ஏலம் எடுத்தது.

கோவை லைகா கிங்ஸ் அணி விக்கெட் கீப்பர் லோகேஷ்வரை ரூ.10 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. மேலும் பேட்ஸ்மேன் ஆந்த்ரே சித்தார்த் (ரூ.8.40 லட்சம்), ஆல்ரவுண்டர் அம்ப்ரிஷ் (ரூ.6.25 லட்சம்), பந்து வீச்சாளர் புவனேஷ்வரன் (ரூ.3.05 லட்சம்), ஆல்ரவுண்டர் ரோஹித் (ரூ.1.60 லட்சம்), பேட்ஸ்மேன் விஷால் வைத்யா (ரூ.1 லட்சம்) ஆகியோரையும் வாங்கியது.

நெல்லை ராயல் கிங்ஸ் அணி பேட்ஸ்மேன் முகமது அத்னான் கானை ரூ.7.05 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது. தொடர்ந்து பந்து வீச்சாளர் அஜய் கிருஷ்ணன் (ரூ.4.40 லட்சம்), விக்கெட் கீப்பர் ஆதிஷ் (ரூ.3.80 லட்சம்), ஆல்ரவுண்டர் சச்சின் ராதி (ரூ.2.50 லட்சம்), பந்துவீச்சாளர் யுத்தீஷ்வரன் (ரூ.2.45 லட்சம்), செல்வகணபதி (ரூ.2.05 லட்சம்) ஆகியோரையும் ஏலம் எடுத்தது.

மதுரை பாந்தர்ஸ் அணி ஆல்ரவுண்டர் கார்த்திக்கை ரூ.9.20 லட்சத்துக்கு வாங்கியது. விக்கெட் கீப்பர் ராம் அர்விந்த் (ரூ.8.10 லட்சம்), பேட்ஸ்மேன்கள் கணேஷ் (ரூ.8.05 லட்சம்), அதீக் உர் ரஹ்மான் (ரூ.7.75 லட்சம்), அனிருத் சித்தா (ரூ.6.20 லட்சம்), பந்து வீச்சாளர்கள் கவுதம் தாமரை கண்ணன் (ரூ.5.15 லட்சம்), தீபேஷ் (ரூ.5.15 லட்சம்), விக்னேஷ் (ரூ.2.65 லட்சம்), ஆல்ரவுண்டர் (ரூ.2.65 லட்சம்), பேட்ஸ்மேன் சரத் குமார் (ரூ.2.50 லட்சம்) ஆகியோரையும் ஏலம் எடுத்தது.

திருச்சி கிராண்ட் சோழா அணி ஆல்ரவுண்டர் முகிலேஷை ரூ.17.60 லட்சத்துக்கும், விக்கெட் கீப்பர் சுரேஷ் குமாரை ரூ.16.10 லட்சத்துக்கும் ஏலம் எடுத்தது. மேலும் ஆல்ரவுண்டர்கள் சரவண குமார் (ரூ.8.40 லட்சம்), கவுசிக் (ரூ.8 லட்சம்), வாஷிங்டன் சுந்தர் (ரூ.6 லட்சம்), பேட்ஸ்மேன் சுஜெய் (ரூ.3 லட்சம்), பந்து வீச்சாளர்கள் ஈஸ்வரன் (ரூ.1.20 லட்சம்), கணேஷ் மூர்த்தி (ரூ.1 லட்சம்), ஆல்ரவுண்டர் அந்தோனி தாஸ் (ரூ.1 லட்சம்) ஆகியோரையும் வாங்கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x