Published : 13 Feb 2025 12:30 PM
Last Updated : 13 Feb 2025 12:30 PM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் கேப்டனான ரஜத் பட்டிதார் @ IPL 2025

பெங்களூரு: அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் பட்டிதாரை நியமித்துள்ளது அந்த அணி நிர்வாகம். கோலி மீண்டும் கேப்டன் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கு தங்கள் அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அறிவிக்கும் விதமாக பிரத்யேக நிகழ்வை ஏற்பாடு செய்தது ஆர்சிபி அணி. இதில் 31 வயதான இந்திய வீரர் ரஜத் பட்டிதார் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2021 சீசன் முதல் அவர் ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் களத்தில் விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் அவரை ஆர்சிபி அணி ரூ.11 கோடிக்கு தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது. தன் ஐபிஎல் அணிக்காக 24 இன்னிங்ஸ் ஆடியுள்ள அவர் 799 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் 112 ரன்கள் எடுத்துள்ளார். இந்த முறை அவரது தலைமையிலான ஆர்சிபி கோப்பை வெல்லும் கனவுடன் களம் காண்கிறது.

ஆர்சிபி அணியின் முன்னாள் கேப்டன்கள்: ராகுல் திராவிட், கெவின் பீட்டர்சன், கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, விராட் கோலி, ஷேன் வாட்சன், பாப் டூப்ளசி ஆகியோர் ஆர்சிபி அணியை இதுவரை வழிநடத்தி உள்ளனர். இந்த முறை கோலி மீண்டும் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜத் பட்டிதார் அந்த பொறுப்பை கவனிக்க உள்ளார்.

2025 சீசனுக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விவரம்: ரஜத் பட்டிதார் (கேப்டன்), விராட் கோலி, யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டோன், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், ரசிக் தார், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல் , தேவ்தத் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ராத்தி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x