Published : 11 Feb 2025 07:20 AM
Last Updated : 11 Feb 2025 07:20 AM

உள்ளரங்க மைதான டென்னிஸ்: முதல் முறையாக கோப்பையை வென்றார் கார்லோஸ் அல்கராஸ்

படம்: எக்ஸ்

ரோட்டர்டாம்: நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் ரோட்டர் டாம் ஓபன் உள்ளரங்க டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 3-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 8-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் மினாருடன் மோதினார். இதில் அல்கராஸ் 6-4, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் 52 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஸ்பெயின் வீரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இதுவே முதன்முறையாகும். 21 வயதான அல்கராஸுக்கு இது 17-வது பட்டமாக அமைந்தது. எனினும் உள்ளரங்க மைதானத்தில் அவர், கைப்பற்றிய முதல் பட்டம் இதுவாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x