Published : 09 Feb 2025 02:34 AM
Last Updated : 09 Feb 2025 02:34 AM
சென்னை: ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கேபிடல், மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்ட் டேபிள் 10 ஆகியவை இணைந்து, சென்னை கோல்ஃப் லீக் 2025 போட்டியை வரும் பிப்ரவரி 14-ம் தேதி அன்று தமிழ்நாடு கோல்ஃப் ஃபெடரேஷன் மைதானத்தில் நடத்த உள்ளன.
இரண்டு அமைப்புகளும் மேற்கொண்டுவரும் சமூக சேவைகளுக்கு நிதி திரட்ட இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு அணியும் 8 வீரர்களை உள்ளடக்கி இருக்கும். போட்டிகள் மதியம் 12 மணிக்குத் தொடங்கும். பிப்ரவரி 16 அன்று பரிசளிப்பு விழா நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT