Published : 05 Feb 2025 07:25 AM
Last Updated : 05 Feb 2025 07:25 AM
டேராடூன்: 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாட்மிண்டனில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன் 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் உத்தராகண்டின் சூர்யக்ஷ் ராவத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஆத்யா வரியத், சதீஷ் கருணாகரன் ஜோடி 21-11, 20-22, 21-8 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிரா வின் தீப் ரம்பியா, அட்சய வரங் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. ஆடவருக்கான 3X3 கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி அரை இறுதியில் 15-16 என்ற கணக்கில் கேரளாவிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT