Published : 03 Feb 2025 08:39 AM
Last Updated : 03 Feb 2025 08:39 AM

டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ்: பிரக்​ஞானந்தா, குகேஷ் முன்னிலை

விக் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்​டர்ஸ் செஸ் போட்​டி​யில் இந்திய கிராண்ட்​மாஸ்​டர்கள் டி. குகேஷ், ஆர். பிரக்​ஞானந்தா ஆகியோர் தலா 8.5 புள்​ளி​களுடன் முன்னிலை​யில் உள்ளனர்.

நெதர்​லாந்​தின் விக் ஆன் ஜீ நகரில் இந்த செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலை​யில் நேற்று நடைபெற்ற 12-வது சுற்றுப் போட்​டி​யில் உலக சாம்​பியனான டி. குகேஷ், ஹாலந்து வீரர் ஜோர்டன் வான் பாரஸ்​டுடன் டிரா செய்​தார். அதே நேரத்​தில் பிரக்​ஞானந்தா, செர்பிய வீரர் அலெக்ஸி சரானாவை தோற்​கடித்​தார். 12-வது சுற்றின் முடி​வில் குகேஷ், பிரக்​ஞானந்தா இருவரும் தலா 8.5 புள்​ளி​களுடன் முன்னிலை​யில் உள்ளனர்.

மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, உஸ்பெகிஸ்​தான் வீரர் நோடிர்​பெக் அப்துசாட்​டோரோவை வீழ்த்​தினார்.
சேலஞ்​சர்ஸ் பிரி​வில் இந்திய வீராங்கனை ஆர். வைஷாலி, துருக்கி​யின் எடிஸ் குரேலிடம் தோல்வி கண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x