Published : 03 Feb 2025 08:31 AM
Last Updated : 03 Feb 2025 08:31 AM

சச்சினுக்கு யுவராஜ் சிங் வாழ்த்து

மும்பை: இந்திய கிரிக்​கெட் ஜாம்​பவான் சச்சின் டெண்​டுல்​கருக்கு, இந்திய அணியின் முன்​னாள் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரி​வித்​துள்ளார்.

மும்​பை​யில் நேற்று முன்​தினம் நடைபெற்ற பிசிசிஐ-​யின் வருடாந்திர விருது வழங்​கும் விழா​வில் சச்சின் டெண்​டுல்​கருக்கு கர்னல் சி.கே. நாயுடு வாழ்​நாள் சாதனை​யாளர் விருது வழங்கி கவுரவம் செய்​யப்​பட்​டது.

கனவுகள் நனவாகும்: இந்நிலை​யில் சி.கே.நா​யுடு வாழ்​நாள் சாதனை​யாளர் விருது பெற்ற சச்சினுக்கு, யுவராஜ் சிங் வாழ்த்து தெரி​வித்​துள்ளார். அவர் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்தி​யில், “சி.கே. நாயுடு வாழ்​நாள் சாதனை​யாளர் விருதை வென்​றதற்கு வாழ்த்​துகள் மாஸ்டர் சச்சின். எங்கள் தலைமுறை​யின் ஒவ்வொரு கிரிக்​கெட் வீரருக்​கும், இடைவிடாத கடின உழைப்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை​யுடன் கனவுகள் நனவாகும் என்பதை எங்களுக்​குக் காட்​டியவர் நீங்​கள்​தான்” என்று கூறி​யுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x