Published : 03 Feb 2025 08:24 AM
Last Updated : 03 Feb 2025 08:24 AM

எஸ்ஏ டி20 கிரிக்​கெட் போட்டி: டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அபாரம்

ஜோகன்னஸ்​பர்க்: எஸ்ஏ டி20 கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்டத்​தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்​தி​யாசத்​தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

தென் ஆப்பிரிக்​கா​வில் எஸ்ஏடி20 கிரிக்​கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ஜோகன்னஸ்​பர்க்​கின் வாண்​டரர்ஸ் மைதானத்​தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் விளை​யாடிய டர்பன் அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்​தது. ஹென்​ரிச் கிளாசன் 76, வியான் முல்டர் 30, பிரீட்​ஸ்க் 23, குயிண்டன் டி காக் 16 ரன்கள் எடுத்​தனர்.

இதைத் தொடர்ந்து 174 ரன்கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடத் தொடங்​கியது. இடையில் மழை குறுக்​கிட்​ட​தால் டிஎல்எஸ் முறைப்படி 16 ஓவர்​களில் 147 ரன்கள் எடுத்​தால் வெற்றி என இலக்கு மாற்றி அமைக்கப்​பட்​டது. ஆனால் நிர்​ண​யிக்​கப்​பட்ட 16 ஓவர்​களில் ஜோபர்க் அணி 9 விக்​கெட் இழப்​புக்கு 135 ரன்கள் எடுத்து தோல்வி கண்டது. இதையடுத்து டிஎல்எஸ் முறைப்படி 11 ரன்கள் வித்​தி​யாசத்​தில் டர்பன் அணி வெற்றி பெற்​றதாக அறிவிக்​கப்​பட்​டது.

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி சார்​பில் டோனவன் பெரைரா 51, டூ பிளெஸ்​ஸிஸ் 14, டேவன் ​கான்வே 21 ரன்​கள் எடுத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x