Published : 31 Jan 2025 05:17 AM
Last Updated : 31 Jan 2025 05:17 AM
ஹாக்கி இந்தியா லீக்கில் ஆடவர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு ரூர்கேலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - யுபி ருத்ராஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தது. தமிழக அணி தரப்பில் 32-வது நிமிடத்தில் ஜிப் ஜான்சனும், 53-வது நிமிடத்தில் தோமஸ் சோர்ஸ்பியும் கோல் அடித்தனர். யுபி ருத்ராஸ் அணி தரப்பில் 8-வது நிமிடத்தில் சுதீப் ஷிராம்கோவும், 15-வது நிமிடத்தில் லலித் குமார் உபாத்யாயிம் கோல் அடித்தனர்.
இதையடுத்து நடைபெற்ற ஷூட்அவுட்டில் யுபி ருத்ராஸ் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. லீக் சுற்றின் முடிவில் தமிழ்நாடு டிராகன்ஸ் 18 புள்ளிகளுடன் 4-வது இடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ், ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT