Published : 27 Jan 2025 12:47 AM
Last Updated : 27 Jan 2025 12:47 AM

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: 7-வது சுற்றில் குகேஷ் அபார வெற்றி

விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரும், உலக சாம்பியனுமான டி. குகேஷ், சக நாட்டு வீரரான பி. ஹரிகிருஷ்ணாவை வீழ்த்தினார்.

நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் இந்த செஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 7-வது சுற்றில் குகேஷும், ஹரிகிருஷ்ணாவும் மோதினர்.

இதில் சிறப்பாக விளையாடிய குகேஷ் வெற்றி பெற்று முழு புள்ளியையும் கைப்பற்றினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசாட்டோரோவுடன் டிரா செய்தார். மற்றொரு இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வார்மர்டாமிடம் தோல்வி கண்டார்.

7-வது சுற்றின் முடிவில் இந்திய வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசாட்டோரோவ் ஆகியோர் தலா 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

சாலஞ்சர்ஸ் பிரிவில் இந்திய வீராங்கனை ஆர். வைஷாலி, நெதர்லாந்தின் பெஞ்சமின் போக்குடன் டிரா செய்தார். மற்றொரு ஆட்டத்தில் சீனா வீராங்கனை மியாயி லு சிறப்பாக விளையாடி இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக்கை வீழ்த்தினார். 7-வது சுற்றின் முடிவில் இந்திய வீராங்கனை ஆர். வைஷாலி 4 புள்ளிகளுடன் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x