Published : 26 Jan 2025 07:33 AM
Last Updated : 26 Jan 2025 07:33 AM
ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக்கில் நேற்று ஆடவர் பிரிவில் ரூர்கேலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - கோனாசிகா விசாகப்பட்டினம் அணிகள் மோதின.
இதில் விசாகப்பட்டினம் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அரைஜீத் சிங் ஹண்டல் 14-வது நிமிடத்திலும், ஜாக் வாலர் 45-வது நிமிடத்திலும், டிம் ஹோவர்ட் 50-வது நிமிடத்திலும், நிக்கின் திம்மையா சேந்தண்டா 51-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.
தமிழக டிராகன்ஸ் அணி சார்பில் 8-வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸும், 56-வது நிமிடத்தில் கிரெய்க் டாமும் தலா ஒரு கோல் அடித்தனர். ஏற்கனவே 6 வெற்றிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள தமிழ்நாடு அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 29-ம் தேதி உத்தரபிரதேச அணியுடன் மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT