Published : 19 Jan 2025 05:04 AM
Last Updated : 19 Jan 2025 05:04 AM
ஹாக்கி இந்தியா லீக்கில் ஆடவர் பிரிவில் நேற்று ராஞ்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி - ஹைதராபாத் டூஃபேன்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத் அணி சார்பில் 21-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்டுத்தி கொன்சலோ பெய்லாட் கோல் அடித்தார். இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.
தொடர்ந்து அந்த அணியின் வீரர் ஆர்தர் டி ஸ்லூவர் 31-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றி அசத்தினார். அடுத்த 2-வது நிமிடத்தில் டிம் பிராண்ட், ஃபீல்ட் கோல் அடிக்க ஹைதராபாத் டூஃபேன்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலையை எட்டியது. இதையடுத்து 48-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கொன்சலோ பெய்லாட் கோலாக மாற்றினார்.
முடிவில் ஹைதராபாத் டூஃபேன்ஸ் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கடைசி போராடிய போதிலும் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. ஹைதராபாத் அணி 13 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT