Published : 17 Jan 2025 10:54 AM
Last Updated : 17 Jan 2025 10:54 AM
மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றுக்கு இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றுப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக்கும், ஸ்லோவாக்கியாவின் ரெபேக்கா ஸ்ராம்கோவா வும் மோதினர்.
இதில் இகா ஸ்வியாடெக் 6-0. 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேற்றம் கண்டார். இதேபோல் 6-ம் நிலை வீராங்கனையான கஜகிஸ்தானின் எலினா ரைபாகினா 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கில் இவர் ஜோவிக்கை (அமெரிக்கா) வீழ்த்தினார். இதன்மூலம் 3-வது சுற்றில் விளையாட எலினா ரைபாகினா தகுதி பெற்றுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் உக்ரைனின் தயானா யஸ்த் ரேம்ஸ்கா 6-0. 6-1 என்ற நேர் செட் கணக்கில் மான்டென்கிரின் நாட்டைச் சேர்ந்த டங்கா கோவினிக்கை தோற்கடித்தார்.
மற்ற ஆட்டங்களில் பிரேசிலின் பீட்ரிஸ் ஹாடட் மையா 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் எரிகா ஆன்ட்ரிவா வையும், அமெரிக்காவின் எம்மா நவ்வாரோ 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் ஜியுவையும், துனீசியாவின் ஆன்ஸ் ஜபேர் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் மரியா கேமிலா ஒசோரியாவையும், கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவா 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜெங் ஷுவாயையும். ரஷ்யா வின் டாரியா கஸட்கினா 6-2. 6-0 என்ற செட் கணக்கில் வாங் யஃபானையும் (சீனா). ஜெர்மனி யின் இவா லிஸ் 6-2, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் வர்வாரா கிராசேவாவை யும். பிரிட்டனின் எம்மா ரடுகானு 6-3, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவையும் வீழ்த்தினர்.
ஜன்னிக் அபாரம்: ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றுப் போட்டியில் இத்தாலி நிலை வீரபாட்டியின் முதல் சின்னர், ஆஸ்திரேலியாவின் டிரிஸ்டன் ஸ்கூல்கேட்டுடன் மோதினார். இதில் சின்னர் 4-6, 6-4, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் அமெரிக்காவின் மார்க்கஸ் கிரோன் 7-5, 3-6, 7-5, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் தாமஸ் எட்சேவெர்ரியையும், செர்பியாவின் மியோமிர் கெக் மனோவிக் 6-4, 6-4, 6-2 என்ற கணக்கில் போலந்து வீரர் ஹுபர்ட் ஹுர்காக்ஸையும். டென்மார்க்கின் ஹோல்கர் ரூனே 7-6 (7/3), 2-6, 6-3, 7-6 (8/6) என்ற செட் கணக்கில் இத்தாலி யின் மாட்டியோ பெரட்டினியை யும், அமெரிக்காவின் அலெக்ஸ் மைக்கேல்சென் 7-5.63.7-6(7/4) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் மெக்கேப்பையும், ரஷ்ய வீரர் கரேன் கச்செனோவ் 7-6(7/1), 46.6-3.6-3 என்ற செட் கணக்கில் கனடாவின் டியாலோவையும் வென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT