Published : 16 Jan 2025 12:45 AM
Last Updated : 16 Jan 2025 12:45 AM

அயர்​லாந்​துக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி அபார வெற்றி

ராஜ்கோட்: அயர்​லாந்​துக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் இந்திய மகளிர் அணி 304 ரன்கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்றியைப் பெற்​றது.

அயர்​லாந்து மகளிர் அணி இந்தியா​வில் சுற்றுப்​பயணம் செய்து 3 ஒரு நாள் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடி வருகிறது. முதல் 2 போட்​டிகளி​லும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கெனவே கைப்​பற்றி​விட்​டது.

இந்நிலை​யில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி ராஜ்கோட் மைதானத்​தில் நேற்று நடைபெற்​றது. முதலில் விளை​யாடிய இந்திய அணி 50 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 435 ரன்கள் குவித்​தது. தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 129 பந்துகளில் 154 ரன்களும், கேப்டன் ஸ்மிருதி மந்தனா 80 பந்துகளில் 135 ரன்களும் குவித்​தனர். பின்னர் விளை​யாடிய அயர்​லாந்து அணி 31.4 ஓவர்​களில் 131 ரன்களுக்கு ஆட்ட​மிழந்​தது. இதையடுத்து இந்திய அணி 304 ரன்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்​கில் முழு​மை​யாகக் கைப்​பற்றியது. இந்திய அணி தரப்​பில் தீப்தி சர்மா 3, தனுஜா கன்வார் 2, திடாஸ் சாது, சாயாலி சாட்​கரே, மின்னு மணி ஆகியோர் தலா ஒரு விக்​கெட் சாய்த்​தனர். இந்​திய மகளிர் அணி 435 ரன்​களைக் கு​வித்​ததன் மூலம் ஒரு நாள் ​போட்​டிகளில் அதிகபட்ச ஸ்​கோரை எடுத்​து சாதனை படைத்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x