Published : 16 Jan 2025 12:35 AM
Last Updated : 16 Jan 2025 12:35 AM

டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸை வீழ்த்​தியது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் | SA20

டர்பன்: தென் ஆப்பிரிக்க டி20 கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்​தி​யாசத்​தில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்​தி​யது.

தென் ஆப்பிரிக்​கா​வில் டி20 கிரிக்​கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன் ​தினம் டர்பன் கிங்ஸ்​மீட் மைதானத்​தில் நடைபெற்ற லீக் போட்​டி​யில் டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

முதலில் விளை​யாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 169 ரன்கள் குவித்​தது. அந்த அணியின் டேவன் கான்வே 22, லியுஸ் டு பிளாய் 38, ஜானி பேர்ஸ்டோ 26 சேர்த்​தனர். பின்னர் 170 ரன்கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 18 ஓவர்​களில் 141 ரன்களுக்கு ஆட்ட​மிழந்​தது. அதிகபட்​சமாக குயின்டன் டி காக் 55 ரன்களும், ஹென்​ரிச் கிளாசன் 29 ரன்களும் குவித்​தனர்.

இதையடுத்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்டது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தரப்​பில் ஜெரால்டு கோட்ஸி, டோனவன் பெரேரா, தப்ரைஸ் ஷம்சி ஆகியோர் தலா 2 விக்​கெட்கள் சாய்த்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x