Published : 13 Jan 2025 09:53 AM
Last Updated : 13 Jan 2025 09:53 AM

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கன், ஆஸி., வங்கதேசம், நியூஸிலாந்து அணிகள் அறிவிப்பு

சென்னை: எதிர்வரும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் நியூஸிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ‘யார்? யார்?’ என பார்ப்போம்.

பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இதில் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடுகிறது.

தலா 4 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு குரூப் சுற்று போட்டிகள் நடைபெறுகிறது. குரூப் ‘ஏ’-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேசம் இடம்பெற்றுள்ளது. குரூப் ‘பி’-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த சூழலில் தொடரில் விளையாடும் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் நியூஸிலாந்து அணி தங்கள் அணியில் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்: ஹஷ்மதுல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஸத்ரான், சாதிக் உல்லா அடல், அஸ்மத்துல்லா ஒமர்சாய், முகமது நபி, குல்பதின் நைப், ரஷீத் கான், கசன்ஃபர், நூர் அகமது, பசல் ஹக் ஃபரூக்கி, நவீத் ஸத்ரான் மற்றும் ஃபரித் அகமது மாலிக்.

இவர்களோடு தர்வீஷ் ரசூலி, கரோத்தி மற்றும் பிலால் ஷமி ஆகியோர் அந்த அணியின் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக ஐசிசி தொடர்களில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த தொடரிலும் அது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா: கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்பா.

‘எதிரணி மற்றும் கள சூழலுக்கு ஏற்ப ஆடும் லெவனை இறுதி செய்யும் வகையில் அணியை தேர்வு செய்துள்ளோம்’ என அந்த அணியின் தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பட்டம் வெல்லும் முனைப்பில் களம் காண்கிறது ஆஸ்திரேலிய அணி. இருப்பினும் இது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் முதற்கட்ட அணி அறிவிப்பு என்பதால் சில அணி வீரர்களில் சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்.

வங்கதேசம்: நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ (கேப்டன்), சவுமியா சர்க்கார், தன்சித் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, ஜகீர்ர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹுசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், பர்வேஸ் ஹுசைன் எமன், நஸீம் அகமது, தன்சிம் ஹசன் ஷகிப், நஹித் ராணா.

நியூஸிலாந்து: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மேன், டெவன் கான்வே, ஃபெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், ஓ'ரூர்க், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங் ஆகியோருடன் ஜேக்கப் டஃபி ரிசர்வ் வீரராக இடம்பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x