Published : 12 Jan 2025 02:35 AM
Last Updated : 12 Jan 2025 02:35 AM

ஹாக்கியில் தமிழ்நாடு டிராகன்ஸ் வெற்றி

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தனது 5-வது ஆட்டத்தில் - பெங்கால் டைகர்ஸ் அணி எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணி சார்பில் 16-வது நிமிடத்தில் கார்த்திக் செல்வமும், 37-வது நிமிடத்தில் உத்தம் சிங்கும் ஃபீல்டு கோல் அடித்தனர்.

பெங்கால் டைகர்ஸ் அணி தரப்பில் 35-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்ட்ரோக்கில் ரூபிந்தர் பால் சிங் கோல் அடித்தார். தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த தொடரில் தமிழ்நாடு டிராகன்ஸ் 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x