Published : 11 Dec 2024 08:04 AM
Last Updated : 11 Dec 2024 08:04 AM

ஹைதராபாத்துடன் சென்னையின் எஃப்சி இன்று மோதல்

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் அன்று (11-ம் தேதி) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எப்ஃசி அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.

சென்னையின் எஃப்சி அணி 11 போட்டிகளில் விளையாடிய 3 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேசமயம், ஹைதராபாத் எஃப்சி 10 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, 7 தோல்விகளுடன் 7 புள்ளிகளைப் பெற்று 12-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குகின்றன.

இதனால் வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் இரு அணிகளுமே கவனம் செலுத்தக்கூடும். ஐஎஸ்எல் தொடரில் இரு அணிகளும் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் ஹைதராபாத் எஃப்சி, சென்னையின் எஃப்சி ஆகிய இரு அணிகளும் தலா 4 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x