Published : 20 Nov 2024 08:35 PM
Last Updated : 20 Nov 2024 08:35 PM
ராஜ்கிர்: மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் பிஹார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீனாவுடன் இன்று மோதியது. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.
இந்திய அணி சார்பில் 31-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை தீபிகா கோலாக மாற்றினார். இந்த தொடரில் அவர், அடித்த 11-வது கோலாக இது அமைந்தது. மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி பட்டம் வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2016 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. சீன அணி 3-வது முறையாக பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்து தொடரை 2-வது இடத்துடன் நிறைவு செய்தது. முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜப்பான் - மலேசியா அணிகள் மோதின. இதில் ஜப்பான் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT