Published : 10 Nov 2024 07:19 AM
Last Updated : 10 Nov 2024 07:19 AM
சென்னை: ஐஎஸ்எல் தொடரில் நேற்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - மும்பை சிட்டி எஃப்சி அணிகள் மோதின. இந்த ஆட்டம் ஐஎஸ்எல் தொடரின் 1000-வது ஆட்டமாக அமைந்தது.
ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கானர் ஷீல்ட்ஸ் உதவியுடன்பந்தை பெற்ற சென்னையின் எஃப்சி அணியின் வின்சி பரேட்டோ பந்தை வேகமாககடத்திச் சென்று பாக்ஸ் பகுதியின் வலது புறத்தில் இருந்து இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் அதை மும்பை சிட்டி எஃப்சிஅணியின் கோல்கீப்பர் புர்பா லாசென்பா வலதுபுறத்தில் பாய்ந்து கோல்விழவிடாமல் தடுத்தார்.
19-வது நிமிடத்தில் மும்பைஅணியின் வான் நீஃப், பாக்ஸ்பகுதிக்கு வெளியே இருந்துஅடித்த பந்தை கோல்கம்பத்தின் மையப் பகுதியில் சென்னையின் எஃப்சி அணியின் கோல்கீப்பர் முகமது நவாஸ் தடுத்தார். முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
60-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி அணியின் கானர் ஷீல்ட்ஸ் உதவியுடன் பந்தை பெற்றரியான் எட்வர்ட்ஸ் பாக்ஸின்மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் சென்னையின் எஃப்சி 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால்அடுத்த 3-வது நிமிடத்தில் மும்பை சிட்டி எஃப்சி பதிலடி கொடுத்தது. கார்னரில் இருந்து வான் நீஃப் அடித்த பந்தை, கோல்கம்பத்துக்கு 6 அடி தூரத்தில் நின்ற போது நேதன் ரோட்ரிக்ஸ் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக 9 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில் சென்னையின் எஃப்சி அணியின் குர்கீரத் சிங் அடித்த கிராஸை பெற்ற டேனியல் ஷிமா சுக்வு, பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து இலக்கை நோக்கி அடித்த பந்தை மும்பை அணியின் கோல் கீப்பர் புர்பா லாசென்பா வலதுபுறம் பாய்ந்து தடுத்தார்.
கடைசி வரை போராடியும் இரு அணிகள் தரப்பிலும் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிடைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT