Published : 20 Oct 2024 09:03 AM
Last Updated : 20 Oct 2024 09:03 AM
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் லீக் சுற்றின் முடிவில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் ஆகிய 4 அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இதில் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணிவீழ்த்தி இறுதி சுற்றில் நுழைந்தது. அதேவேளையில் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்தியது. சாம்பியன் கோப்பையாருக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டிஇன்று இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறுகிறது. இதில் நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளுமே இதுவரை டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது இல்லை. நியூஸிலாந்து அணி 2009 மற்றும் 2010-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தது. அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT