Published : 15 Oct 2024 09:26 AM
Last Updated : 15 Oct 2024 09:26 AM

பாகிஸ்தானை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறிய நியூஸி: வெளியேறிய இந்தியா - மகளிர் டி20 WC

ஹர்மன்பிரீத் கவுர்

துபாய்: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் இருந்து இந்தியா வெளியேறி உள்ளது.

‘குரூப் - ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் 54 ரன்களில் வெற்றி பெற்றது இதன் மூலம் நியூஸிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அதே பிரிவில் இருந்த இந்திய அணி வெளியேறி உள்ளது.

திங்கட்கிழமை (அக்.14) நடைபெற்ற நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி சுமார் 8 கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டது.

111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. நியூஸிலாந்து அணியின் அமெலியா கெர் (3 விக்கெட்டுகள்), எடன் கார்சன் (2 விக்கெட்டுகள்) ஆகியோர் அற்புதமாக பந்து வீசி பாகிஸ்தானை வீழ்த்தினர். அதன் மூலம் பேட்டிங்கில் சொதப்பி இருந்தாலும் பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கில் சிறந்து விளங்கியது.

இந்தியா வெளியேற்றம்: ‘குரூப் - ஏ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி 4 லீக் ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்திய இந்தியா, நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி தொடரை விட்டு வெளியேறி உள்ளது. கடந்த 2020-ல் இந்திய அணி இறுதிப் போட்டியில் விளையாடி இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x