Published : 28 Aug 2024 07:27 AM
Last Updated : 28 Aug 2024 07:27 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: 2-வது சுற்றில் ஜோகோவிச்

நோவக் ஜோகோவிச்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியன்களான நோவக் ஜோகோவிச், கோகோ காஃப் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், மால்டோவாவின் ரடு ஆல்போட்டுடன் மோதினார். இதில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜோகோவிச் 6-2, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் 6-2, 6-7 (5-7), 6-3, 6-2 என்ற செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த மாக்சிமிலியன் மார்டரரையும், 6-ம் நிலை வீரரான ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லெவ் 6-3, 7-6 (7-3),7-5 என்ற செட் கணக்கில் பிரேசிலின் தியாகோ செய்போத்தையும், 8-ம்நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடு 7-6 (7-2), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் பு யன் சாக்கோட்டையும் வீழ்த்தினர்.

9-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3,6-4, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கிரியன் ஜாக்கெட்டையும், 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 7-5, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் கமிலோ யுகோவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

15-ம் நிலை வீரரான டென்மார்க்கின் ஹோல்கர் ரூன் 2-6, 1-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவிடம் தோல்வி அடைந்தார்.

2020-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் சாம்பியனான ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 4-6, 2-6, 2-6 என்ற கணக்கில் 12-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனிடம் வீழ்ந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காஃப்,பிரான்ஸின் வர்வரா கிராச்சேவாவுடன் மோதினார். இதில் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளகோகோ காஃப் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பிரிசில்லா ஹானை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார்.

7-ம் நிலை வீராங்கனையான சீனாவின் செங் கின்வென் 4-6, 6-4,6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவையும் 8-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பார்போரா கிரெஜிகோவா 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் மரினாவையும் 20-ம் நிலை வீராங்கனையான பெலாரஸின் விக்டோரியா அசரங்கா 3-6, 6-1, 6-1 என்றசெட் கணக்கில் உக்ரைனின் யூலியாவையும் 13-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவரோவா 6-1, 6-1 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனா பிளிங்கோவாவையும் வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தனர்.

12-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் தரியா கஸட்கினா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ருமேனியாவின் ஜாக்குலின் கிறிஸ்டியனையும் 14-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் கேத்ரினா சினியகோவாவையும், 27-ம் நிலைவீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-6, 6-3,6-4 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் லூர்து கார்லேவையும் வீழ்த்தினர். 42-ம் நிலை வீராங்கனையான போலந்தின் மக்டா லினெட் 4-6, 3-6 என்ற நேர் செட்க ணக்கில் 16 வயதான அமெரிக்காவின் இவா ஜோவிக்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

சுமித் நாகல் வெளியேற்றம்: ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல், நெதர்லாந்தின் டாலோன் கிரீக்ஸ்பூருடன் மோதினார். இதில் சுமித் நாகல் 1-6, 3-6, 6-7 (8-6) என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x