Published : 28 Aug 2024 07:41 AM
Last Updated : 28 Aug 2024 07:41 AM
சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நேற்று தொடங்கின. இதில் கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் டிஎன்சிஏ லெவன் - மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்று பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்ஜன் பால் 87 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 65 ரன்களும், பாபா இந்திரஜித் 115 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 61 ரன்களும் எடுத்தனர். பூபதி வைஷ்ண குமார் 63, சோனுயாதவ் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் தனுஷ் கோட்டியன், ஹிமான்ஷு சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் - டிஎன்சிஏ பிரெசிடண்ட் அணிகள் மோதின. இதில்டாஸ் வென்று பேட் செய்த குஜராத் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது. ஜெய்மீத் படேல் 214 பந்துகளில், 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 125 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முன்னதாக ஷிதிஜ் படேல் 62, உர்வில் படேல் 33, துருஷந்த் சோனி 44 ரன்களில் ஆட்டமிழ்நத்னர். டிஎன்சிஏ பிரெசிடண்ட் அணி தரப்பில் சித்தார்த் 5 விக்கெட்கள் வீழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT