Published : 27 Aug 2024 07:43 AM
Last Updated : 27 Aug 2024 07:43 AM

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னையின் எப்சி ஆட்டங்கள் அறிவிப்பு

சென்னையின் எப்சி அணியினர்

சென்னை: 13 அணிகள் கலந்து கொள்ளும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 11-வது சீசன் போட்டி வரும் செப்டம்பர் 13-ம் தேதி தொடங்குகிறது. இதில் 2017-18-ம் ஆண்டு சாம்பியனான சென்னையின் எப்சி வரும் டிசம்பர் வரை மோத உள்ள ஆட்டங்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சென்னையின் எப்சி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி ஒடிசாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் புவனேஷ்வரில் நடைபெறுகிறது. தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் சென்னையின் எப்சி தனது சொந்த மைதானத்தில் 26-ம் தேதி அறிமுக அணியான முகமேதன் ஸ்போர்ட்டிங் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

தொடர்ந்து அக்டோபர் 1-ல் ஹைதராபாத், 17-ல் நார்த்ஈஸ்ட் யுனைட்டெட், 24-ல் கோவா, 31-ல் பஞ்சாப், நவம்பர் 4-ல் ஜாம்ஷெட்பூர், 9-ல்மும்பை, 24-ல் கேரளா, 30-ல் மோகன் பகான்,டிசம்பர் 7-ல் ஈஸ்ட் பெங்கால், 11-ல்ஹைதராபாத், 21-ல் மும்பை, 28-ல் பெங்களூருஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்துகிறது சென்னையின் எப்சி அணி. இதில் கோவா, மும்பை, ஈஸ்ட் பெங்கால், ஹைதராபாத், பெங்களூரு ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்கள் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x