Published : 25 Aug 2024 09:52 AM
Last Updated : 25 Aug 2024 09:52 AM
சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் சேலத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியன் ரயில்வேஸ் - டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணிகள் மோதின. இதன் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 459 ரன்களும், ரயில்வேஸ் 355 ரன்களும் எடுத்தன. 104 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 53 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 82, ரித்திக் ஈஸ்வரன்53 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 332 ரன்கள் இலக்குடன் ரயில்வேஸ் அணி பேட்டிங் செய்தது. நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி 73 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆட்ட நாயகனாக டிஎன்சிஏ பிரெசிடண்ட் லெவன் அணியின் முகமது அலிதேர்வானார். அவர், முதல் இன்னிங்ஸில் 182 ரன்கள் விளாசியிருந்ததார்.
கோவையில் நடைபெற்ற ஆட்டத்தில் ஹரியானா - டிஎன்சிஏ லெவன் அணிகள் மோதின. இதன் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ லெவன் 393 ரன்களும் ஹரியானா 218 ரன்களும் எடுத்தன. 175 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ லெவன் 56 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
பாபா இந்திரஜித் 74, பிரதோஷ்ரஞ்ஜன் பால் 44 ரன்கள் சேர்த்தனர். 353 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹரியானா அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 103 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இரு இன்னிங்ஸையும் சேர்த்து 9 விக்கெட்கள் வீழ்த்திய டிஎன்சிஏ லெவன் அணியின் சாய் கிஷோர் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT