Published : 13 Aug 2024 07:49 AM
Last Updated : 13 Aug 2024 07:49 AM

யுடிடி தொடரில் இருந்து ஸ்ரீஜா அகுலா விலகல்: நித்யஸ்ரீக்கு வாய்ப்பு

ஸ்ரீஜா அகுலா

சென்னை: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் (யுடிடி) இருந்து முன்னணி வீராங்கனையான இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, காயம் காரணமாக விலகி உள்ளார்.

8 அணிகள் கலந்து கொள்ளும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) தொடர் வரும் 22-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்குகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடுவதற்காக உலகத் தரவரிசையில் 22-வது இடமும், இந்திய அளவில் முதலிடமும் வகிக்கும் ஸ்ரீஜா அகுலா ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் 2 முறை தேசிய சாம்பியனான 26 வயதான ஸ்ரீஜா அகுலாவுக்கு எலும்பு பகுதியில் சிறிய முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவர்கள் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க அறிவுரை வழங்கி உள்ளனர். இதன் காரணமாக அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக ஸ்ரீஜா அகுலா அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியில் யு-19 வீராங்கனையான சென்னையை சேர்ந்த நித்யஸ்ரீ மணி சேர்க்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x