Published : 13 Aug 2024 08:08 AM
Last Updated : 13 Aug 2024 08:08 AM

12 அணிகள் கலந்து கொள்ளும் புச்சிபாபு கிரிக்கெட் தொடர் ஆக.15-ம் தேதி தொடக்கம்

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 15-ல் தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ரயில்வேஸ், குஜராத், மும்பை, ஹரியானா, ஜம்மு & காஷ்மீர், சத்தீஸ்கர், ஹைதராபாத், பரோடா, டின்சிஏ பிரெசிடெண்ட் லெவன், டிஎன்சிஏ லெவன் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

இவை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 3 அணிகள் இடம் பெற்றுள்ளன. டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 'பி' பிரிவிலும், டிஎன்சிஏ லெவன் 'சிர் பிரிவிலும் உள்ளன.

ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை நடைபெறும் முதல் சுற்று ஆட்டங்களில் மத்திய பிரதேசம் - ஜார்க்கண்ட், ரயில்வேஸ் - குஜராத், மும்பை - ஹரியானா, சத்தீஸ்கர் ஜம்மு & காஷ்மீர் ஆகிய அணிகள் மோதுகின்றன. ஆகஸ்ட் 21 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் ஜார்க்கண்ட் ஹைதராபாத்

ரயில்வேஸ் - டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன், ஹரியானா - டிஎன்சிஏ லெவன், ஜம்மு & காஷ்மீர் - பரோடா அணிகளும் மோதுகின்றன. ஆகஸ்ட் 27 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் ஆட்டங்களில் மத்திய பிரதேசம் - ஹைதராபாத், குஜராத் - டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன், மும்பை - டிஎன்சிஏ லெவன், பரோடா - சத்தீஸ்கர் ஆகிய அணிகள் மோதுகின்றன.

போட்டிகள் திருநெல்வேலி, கோவை, சேலம், நத்தம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. ரஞ்சிக் கோப்பை தொடரை போன்று 4 நாட்கள் கொண்டதாக போட்டி இருக்கும். வெற்றியாளருக்கு ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணி ரூ.2 லட்சத்தை பெறும். முதல் அரை இறுதி ஆட்டம் செப். 2 முதல் 5-ம் தேதி வரை திருநெல்வேலியில் நடைபெறுகிறது. 2-வது அரை இறுதி ஆட்டம் அதே நாட்களில் நத்தத்தில் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி செப்டம்பர் 8 முதல் 11-ம் தேதி வரை நத்தத்தில் நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x