Published : 21 May 2023 04:13 AM
Last Updated : 21 May 2023 04:13 AM
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய, வரும் 24-ம் தேதி ஆன்லைனில் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளன.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது கோடைவிடுமுறையையொட்டி பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தர்ம தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இக்கூட்டம் வரும் ஜூன் மாதம் 15-ம் தேதி வரை இருக்கும் என தேவஸ்தானத்தினர் கருதுகின்றனர்.
இந்நிலையில், வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ. 300 சிறப்பு தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.
ஆதலால், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளம் மூலம் மட்டுமே பக்தர்கள் தங்களது டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனவும், போலி இணையங்களை நம்பிஏமாற வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT